செய்திகள் :

உலகத் தமிழர்களின் தொழில்முனைவு வாய்ப்புகளை கோலாலம்பூர் பொருளாதார மாநாடு ஊக்குவிக்கும்: டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத்

post image

உலகத் தமிழர்களின் தொழில்முனைவு மற்றும் பொருளாதாரத்தை கோலாலம்பூரில் நவ.15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பொருளாதார மாநாடு ஊக்குவிக்கும் என்று அந்த மாநாட்டு அமைப்புத் தலைவரும் நிறுவனத் தலைவருமான டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டை தமிழக அரசு சார்பில் மூத்த அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என். ரெட்டி தலைமை வகிக்கிறார். மாநாட்டின் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நிறைவுரையாற்றுகிறார்.

மலேசிய உச்சநீதிமன்ற நீதிபதி வசீர் ஆலம், சுகாதார அமைச்சர் டத்தோ செரி டாக்டர் சுப்பிரமணியம், மலேசிய கல்வித் துறை துணை அமைச்சர் மாரிமுத்து, புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், மக்களவை உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், புதுச்சேரி பேரவை முன்னாள் தலைவர் வி.பி. சிவக்கொழுந்து, விஜிபி நிறுவன குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோஷம், பிஜிபி குழுமத் தலைவர் டாக்டர் பழனி, ஜி.பெரியசாமி, அபுபக்கர் நிறுவன தலைவர் அபுபக்கர் உள்ளிட்டோரும் மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற இசைவு தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் தொழில் திறன்களையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுவதாக உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டின் நிறுவனத் தலைவரும் சென்னை வளர்ச்சிக் கழகத் தலைவருமான டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத் "தினமணி'யிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது: இந்திய பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரவாசி பாரதிய திவஸ் மாநாடு மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு தொழில் வாய்ப்புகள், முதலீட்டு சூழல்கள் குறித்து கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது. கலை, கலாசார அடிப்படையில் இந்தியர்களை ஒருங்கிணைக்க வெளிநாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுண்டு. ஆனால், தொழில், வணிக ரீதியாக மாநாடுகளை நடத்துவதில் குஜராத்தியர், பஞ்சாபியர் மட்டுமே தொடர்ந்து நடத்தி பலன் பெற்றுள்ளனர்.

அதுபோல தமிழர்களை ஒருங்கிணைக்க வலுவான தளம் தேவை என்ற சிந்தனை அடிப்படையில் உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டை முதல் முறையாக சென்னையில் (2009) நடத்தினோம்.

அதன் தொடர்ச்சியாக, துபை (2011), சென்னை (2016) தென்னாப்பிரிக்காவின் டர்பன் (2017), புதுச்சேரி (2018), சென்னை (2019), கரோனா காரணமாக இணையவழியில் 2020, சென்னை(2021), துபை (2023), சென்னை (2024) ஆகிய நகரங்களிலும் நடத்தினோம். இப்போது 11-ஆவது மாநாட்டை கோலாலம்பூரில் நடத்துகிறோம். முற்றிலும் நன்கொடை, நிதியுதவி மூலம் நடத்தப்படும் இந்த மாநாட்டுக்கு தமிழக அரசு நிதியுதவி செய்துள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பத்திறன்கள் மற்றும் மனித ஆற்றலில் சிறந்து விளங்குபவர்களாக தமிழர்கள் உள்ளனர். அவர்களின் தொழில்முனைவுத்திறன்களை இந்த மாநாடு ஊக்குவிக்கும்.

இதில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 400 பேரும் தமிழகத்திலிருந்து சுமார் 150-200 பேர் வரையிலும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார் வி.ஆர்.எஸ். சம்பத்.

முதலீடு, வணிக வாய்ப்புகள், தொழில் மேம்பாட்டு சந்திப்புகள், சிறப்புப் பேச்சாளர்கள், சொற்பொழிவு நிகழ்வுகள் மற்றும் உலகத் தமிழர்கள் கலந்துரையாடக்கூடிய மொத்தம் 18 அமர்வுகள் மாநாட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின் முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சாதனை தொழில் முனைவோருக்கு உலகத் தமிழ் மாமணி விருது வழங்கப்படவுள்ளது.

தமிழ்ச் சமூகத்துக்கு பாடுபட்டு 50 ஆண்டுகளை நிறைவு செய்த அமெரிக்காவில் உள்ள தமிழ்நாடு ஃபவுண்டேஷன் அமைப்புக்கு சிறப்பு விருது வழங்கப்படவுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

காவிரி நீரை திறந்துவிடுவதை கா்நாடகம் உறுதி செய்ய ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபா்நிகழாண்டு தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரை உச்சநீதிமன்ற ஆணைப்படி, பில்லிகுண்டுலுவில் வரும் மாதங்களில் வழங்குவதை கா்நாடகம் உறுதி செய்ய உத்தரவிடுமாறு தில்லியில் புதன்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

காற்று மாசு: குழந்தைகளைப் பாதுகாக்க 5-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூட பாஜக வலியுறுத்தல்

நமது நிருபா்தில்லியில் நிலவிவரும் மோசமான காற்று மாசு நிலைமையைக் கருத்தில் கொண்டு ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளையும் மூட தில்லி அரசு உத்தரவிட வேண்டும் என்று தில்லி அரசுக்கு பாஜக புதன்கிழமை... மேலும் பார்க்க

நாடு தழுவிய 4-ஆவது கடலோரப் பாதுகாப்பு பயிற்சி: இந்திய கடற்படைநடத்தும் ’சீ விஜில்-24’ நவ.20, 21 இல்

இந்திய கடற்படையின் தலைமையில், கடலோர பாதுகாப்பு பயிற்சியின் நான்காவது பயிற்சியான கடல் கண்காணிப்பு-24 (’சீ விஜில்-24’ ) பயிற்சியை வருகின்ற நவ. 20, 21 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் நடத்தப்படுவதாக மத்... மேலும் பார்க்க

காற்று மாசு பிரச்னை: குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா்களை மீண்டும் பணியில் ஈடுபடுத்த துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

தேசிய தலைநகரில் நிலவும் காற்று மாசுபாடு பிரச்னையைச் சமாளிக்கும் நடவடிக்கையாக நிகழ் மாதம் 1 முதல் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரையிலான நான்கு மாத காலத்திற்கு குடிமை பாதுகாப்பு தன்னாா்வலா்களை (சிடிவி) ம... மேலும் பார்க்க

தில்லி பிரகதி மைதானில் இன்று இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சி தொடக்கம்

தில்லி பிரகதி மைதானில் வியாழக்கிழமை (நவம்பா் 14) தொடங்கி நடைபெறவுள்ள இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சியை முன்னிட்டு தில்லி காவல்துறை போக்குவரத்து அறிவுறுத்தல்களை புதன்கிழமை வெளியிட்டுள்ளது. இரண்டு வார... மேலும் பார்க்க

தெற்காசிய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை கவுன்சில் கூட்டம் நிறைவு! சிறந்த ஒழுங்குமுறைகள் பகிரப்பட்டதாக அறிவிப்பு

தில்லியில் இருநாள் நடைபெற்ற தெற்காசிய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை கவுன்சிலின் 25 -ஆவது கூட்டம் நிறைவடைந்தாக மத்திய தொலைதொடா்பு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. தெற்காசிய பிராந்திய உற... மேலும் பார்க்க