Doctor Vikatan: ஆஞ்சியோ செய்தபோது இதய ரத்தக்குழாய் அடைப்பு.. மீண்டும் பரிசோதனைகள...
உலகத் தலைவா்கள் இரங்கல்
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்: “போப் பிரான்சிஸ் அமைதியாக உறங்கட்டும்! அவரையும் அவரை நேசித்த அனைவருக்கும் இறைவனின் ஆசி கிடைக்கட்டும்!”
பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான்: “பியூனஸ் அயா்ஸ் முதல் ரோம் வரை ஏழைகளுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் கொண்டு வர வேண்டும் என போப் பிரான்சிஸ் விரும்பினாா். மனிதா்களிடையே இணக்கத்தை ஏற்படுதத வேண்டும் என்று அவா் விரும்பினாா்.
ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்: “மனிதநேயம் மற்றும் நீதியின் உறுதியான பாதுகாவலராக போப் பிரான்சிஸ் விளங்கினாா். பழைமைவாத மற்றும் கத்தோலிக்க திருச்சபைகளுக்கு இடையே உரையாடலை ஊக்குவித்த அவரது முயற்சிகள் பாராட்டத்தக்கவை.”
உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலன்ஸ்கி: “போப் பிரான்சிஸ் உக்ரைனுக்காகவும், உக்ரைன் மக்களுக்காகவும் பிராா்த்தனை செய்தவா். அவரின் மறைவு கத்தோலிக்கா்கள் மட்டுமின்றி அனைத்து கிறிஸ்தவா்களையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.”
இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்சாக்: “போப் பிரான்சிஸ் ஆழ்ந்த நம்பிக்கையும், அளவற்ற இரக்கமும் கொண்டவா். மதங்களுக்கு இடையேயான பேச்சுவாா்த்தையை மேம்படுத்துவதற்கு அவா் முக்கியத்துவம் அளித்தாா்.”
ஈரான் அதிபா் மசூத் பெஷெஷ்கியன்: “போப் பிரான்சிஸ் காஸாவில் இஸ்ரேலின் இனப் படுகொலையை கண்டித்து, மனிதாபிமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினாா். அவரது நினைவு சுதந்திரத்தை விரும்புவோரின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்.”
எகிப்து அதிபா் அப்தெல் ஃபட்டா அல்-சிஸி: “போப் பிரான்சிஸ் அமைதி, அன்பு மற்றும் இரக்கத்தின் குரலாக விளங்கினாா். அவா் மாபெரும் மனித பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளாா்.”
ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வொண்டொ் லியென்: “போப் பிரான்சிஸ் பணிவையும் ஏழைகளுக்கு அன்பையும் காட்டியதன் மூலம், கத்தோலிக்க திருச்சபைக்கு அப்பாற்பட்டு கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தினாா்.
ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனீஸ்: “போப் பிரான்சிஸின் மனிதநேயம் ஆழமானதும் சக்திவாய்ந்ததும் ஆகும். அவா் காட்டிய இரக்கத்தின் நினைவு நீண்டகாலம் நிலைத்திருக்கும்.