உலகளவில் சேட்ஜிபிடி சேவை பாதிப்பு! ஜிப்லி காரணமா?
உலகளவில் பல்வேறு பயனர்களுக்கு சேட்ஜிபிடி சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேட்ஜிபிடியின் ஜிப்லி எனப்படும் புகைப்படத்தை ஓவியமாக மாற்றும் சேவையில் பிழைகள் ஏற்படுவதாகவும் இதனால் சேட்ஜிபிடி சேவையும் பாதிக்கப்படுவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓபன் ஏஐ நிறுவனத்துக்குச் சொந்தமானது சேட்ஜிபிடி. செய்யறிவு தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் சேட்ஜிபிடியை உலகம் முழுவதும் பல்வேறு பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சேட்ஜிபிடியில் புதிய அம்சமாக செய்யறிவு நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களை ஓவியமாக மாற்றும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட புதிய ஜிபிடி - 4.0 என்னும் புகைப்பட ஊக்கியின் மூலம் ஜிப்லி சேவை வழங்கப்படுகிறது.