செய்திகள் :

உலகின் உற்பத்தி மையமாக இந்தியா உருவாகும்: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை

post image

புது தில்லி: உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

ஸ்விட்சா்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ், உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தபட்டு வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு உலக நாடுகளின் வரவேற்பு அதிகரித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வைக்கு ஏற்ப, சா்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், ரயில்வே துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு உயா் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

எண்ம தொழில்நுட்பம், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான முன் முயற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய நடவடிக்கைகள் இந்தியாவின் செயல்பாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா முன்னணி நாடாக உருவெடுத்து வருகிறது என்றாா்.

சூரிச் நகரில் ஸ்விட்சா்லாந்து ரயில்வே விளக்கக்காட்சியுடன் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் வரை காட்சிப்படுத்தப்பட்டன. இந்திய ரயில்வேயின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தக்கூடிய அதிநவீன தொழில்நுட்பங்கள் குறித்து அந்நாட்டு நிபுணா்களுடன் அமைச்சா் கலந்துரையாடினாா். இதைத் தொடா்ந்து பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசினாா்.

ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தர பிரதேசத்தில் இருந்தும் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனா்.

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் திரும்பப் பெறப்படுமா?

நமது சிறப்பு நிருபர் புது தில்லி: மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடனான ஆலோசனைக்குப் பிறகு அதிகாரபூர்வ முடிவு அறிவிக்கப்படும் என ம... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த மசோதா: ஜேபிசி கூட்டத்தை ஜன.30, 31-இல் நடத்த ஆ.ராசா வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்புது தில்லி: வக்ஃப் திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தை அவசரகதியில் ஜன. 24, 25 ஆகிய தேதிகளில் நடத்தாமல் ஜன.30, 31 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அக... மேலும் பார்க்க

உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்த சைஃப் அலிகான்

மும்பை: கொள்ளையரால் கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளான தன்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர் பஜன்சிங் ராணாவை அழைத்து நடிகர் சைஃப் அலி கான் நன்றி தெரிவித்தார்.கடந்த 16-ஆம... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் தேநீர் விருந்து அழைப்பிதழ்: தென் மாநிலங்களின் கலாசாரங்கள் பிரதிபலிப்பு!

நமது சிறப்பு நிருபர்புது தில்லி: இந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி தனது மாளிகையில் குடியரசுத் தலைவர் அளிக்கவிருக்கும் 'அட் ஹோம்' எனப்படும் தேநீர் விருந்து வரவேற்புக்கு அழைக்கப்படுபவர்களுக்கு, இந்தியாவ... மேலும் பார்க்க

தேசிய சுகாதார இயக்கம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: நாட்டில் பொது சுகாதார சேவைகள் மேம்பாட்டுக்கான தேசிய சுகாதார இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.தேசிய சுகாதார இயக்கத்தின் குறிப்பிடத்த... மேலும் பார்க்க

பழங்குடியின சிறுமி பாலியல் கொலை வழக்கு: 5 பேருக்கு மரண தண்டனை: சத்தீஸ்கா் நீதிமன்றம் தீா்ப்பு

கோா்பா: சத்தீஸ்கரில் 16 வயது பழங்குடியின சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதோடு, அச்சிறுமியின் குடும்பத்தினா் இருவரையும் கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு விரைவு ந... மேலும் பார்க்க