செய்திகள் :

வக்ஃப் திருத்த மசோதா: ஜேபிசி கூட்டத்தை ஜன.30, 31-இல் நடத்த ஆ.ராசா வலியுறுத்தல்

post image

நமது சிறப்பு நிருபர்

புது தில்லி: வக்ஃப் திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தை அவசரகதியில் ஜன. 24, 25 ஆகிய தேதிகளில் நடத்தாமல் ஜன.30, 31 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அக்குழுவின் உறுப்பினரும் திமுக எம்.பி.யுமான ஆ. ராசா வலியுறுத்தினார்.

இது தொடர்பாக ஜேபிசி குழுவின் தலைவர் ஜகதாம்பிகா பாலுக்கு ஆ.ராசா புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தில், 'ஜன. 21-ஆம் தேதியன்றுதான் ஜேபிசி குழு உறுப்பினர்கள் பாட்னா, கொல்கத்தா, லக்னௌ ஆகிய இடங்களில் கருத்துக்கேட்பு கூட்டங்களில் கலந்து கொண்டு விட்டு ஊருக்குத் திரும்பினர். எவ்வித முன்னறிவிப்பு மற்றும் ஆலோசனையின்றி திடீரென்று அவசரகதியில் குழுவின் கூட்டம் ஜன. 24, 25 ஆகிய தேதிகளில் நடத்தத் திட்டமிட்டிருப்பது விசித்திரமானது.

விசாரணையின்போது சேகரித்த தகவல்கள், தரவுகளை ஒருங்கிணைத்து மசோதாவில் முன்மொழியப்படும் திருத்தங்கள் தொடர்பாக உறுப்பினர்கள் ஜன.22-ஆம் தேதிக்குள் தெரிவிக்க கூறியிருப்பது இயலாத ஒன்று.

எனவே, ஜன.30, 31-ஆகிய தேதிகளுக்கு ஜேபிசியின் அடுத்த கூட்டத்தை திட்டமிட வேண்டும். ஜன. 31-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவார் என்பதால் அதன் பிறகு அன்றைய தினத்தில் குழுவின் கூட்டத்தை நடத்தலாம் என பெரும்பாலான உறுப்பினர்கள் குழுவின் தலைவரான உங்களிடம் தெரிவித்தனர்.

எனவே, கூட்டுக் குழுவின் கூட்டம் ஒத்திவைக்கப்படாவிட்டால், அது அமைக்கப்பட்டதன் நோக்கமே தோற்கடிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் திரும்பப் பெறப்படுமா?

நமது சிறப்பு நிருபர் புது தில்லி: மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடனான ஆலோசனைக்குப் பிறகு அதிகாரபூர்வ முடிவு அறிவிக்கப்படும் என ம... மேலும் பார்க்க

உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்த சைஃப் அலிகான்

மும்பை: கொள்ளையரால் கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளான தன்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர் பஜன்சிங் ராணாவை அழைத்து நடிகர் சைஃப் அலி கான் நன்றி தெரிவித்தார்.கடந்த 16-ஆம... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் தேநீர் விருந்து அழைப்பிதழ்: தென் மாநிலங்களின் கலாசாரங்கள் பிரதிபலிப்பு!

நமது சிறப்பு நிருபர்புது தில்லி: இந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி தனது மாளிகையில் குடியரசுத் தலைவர் அளிக்கவிருக்கும் 'அட் ஹோம்' எனப்படும் தேநீர் விருந்து வரவேற்புக்கு அழைக்கப்படுபவர்களுக்கு, இந்தியாவ... மேலும் பார்க்க

தேசிய சுகாதார இயக்கம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: நாட்டில் பொது சுகாதார சேவைகள் மேம்பாட்டுக்கான தேசிய சுகாதார இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.தேசிய சுகாதார இயக்கத்தின் குறிப்பிடத்த... மேலும் பார்க்க

பழங்குடியின சிறுமி பாலியல் கொலை வழக்கு: 5 பேருக்கு மரண தண்டனை: சத்தீஸ்கா் நீதிமன்றம் தீா்ப்பு

கோா்பா: சத்தீஸ்கரில் 16 வயது பழங்குடியின சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதோடு, அச்சிறுமியின் குடும்பத்தினா் இருவரையும் கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு விரைவு ந... மேலும் பார்க்க

ரூ.16,518 கோடி தோ்தல் பத்திர நன்கொடை பறிமுதல்: உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல்

புது தில்லி: தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம், அரசியல் கட்சிகள் பெற்ற ரூ.16,518 கோடி நன்கொடையைப் பறிமுதல் செய்யக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய ... மேலும் பார்க்க