சிதம்பரம் திருச்சித்திரக்கூடம் கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்ப...
உ.பி: தேடப்பட்டு வந்த குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!
உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி காவல் துறையினரால் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.
அம்மாவட்டத்தின் படால் கிராமத்திலிருந்து பனாய் பகுதிக்கு செல்லும் சாலையில் நேற்று (ஜன.8) இரவு காவல் துறையினர் வழக்கமான தணிக்கைப் பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது, அந்த சாலையின் வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் வண்டியை நிறுத்தும்படி போலீஸார் செய்கை செய்துள்ளனர். ஆனால், அவர் வண்டியை நிறுத்தாமல் அருகிலிருந்து வயலுக்குள் வண்டியை செலுத்தியுள்ளார். மேலும், அவரை பின் தொடர்ந்த காவல் துறையினரை நோக்கி அந்நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் அவரது காலில் குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்தார். பின்னர் அவரை சுற்றி வளைத்த போலீஸார் அவரை கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையும் படிக்க: எதிர்ப்பை மீறி காதல் திருமணம்... விருந்தில் விஷம் கலந்த தாய்மாமன்!
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஹசன்பீ என்பது தெரிய வந்துள்ளது. அவர் மீது பதாவுன், பரேலி மற்றும் சண்டிகர் ஆகிய பகுதிகளில் 10 திருட்டு வழக்குகள் உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவர் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து ஒரு இரண்டு சக்கர வாகனமும், ஒரு நாட்டுத் துப்பாக்கியும் அதற்கான குண்டுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, அவரை பிடிக்க காவல் துறையினர் ரூ.25,000 சன்மானம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அவர் காவல் துறையினர் கட்டுப்பாட்டில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.