கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம், யானை தாக்கி பலியானால் ரூ.2 லட்சமா? தமிழிசை
ஊட்டி: வகுப்பறையில் தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவி; தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்; நடந்தது என்ன?
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள கிராமம் ஒன்றில் அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பாட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (அக்டோபர் 25) மதிய உணவு இடைவேளையின் போது 9-ம் வகுப்பு அறை உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருப்பதைத் கண்டு குழப்பமடைந்த மாணவர்கள், அதை ஆசிரியர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். வகுப்பறையின் கதவைத் திறந்து உள்ளே ஆசிரியர்கள் நுழைந்துள்ளனர். மாணவி ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீப்பற்ற வைக்க முயற்சி செய்து கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். உடனடியாக அந்த மாணவி மீது தண்ணீரை ஊற்றி தடுத்துள்ளனர். விபரீத முடிவை எடுத்த மாணவியின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
ஆசிரியர்கள் சொல்வதென்ன?
இந்த பின்னணி குறித்து தெரிவித்த ஆசிரியர்கள், "9 -ம் வகுப்பு படிக்கும் இந்த மாணவி பல பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. மிகவும் குறைவான மதிப்பெண் எடுத்திருக்கிறார். பெற்றோரும் ஆசிரியர்களும் கண்டித்துள்ளனர். இந்நிலையில், பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற இருந்தது. அதனால், மாணவியின் தந்தையை வரச்சொல்லியிருந்தோம். அதற்குப் பயந்து புத்தகப் பையில் மண்ணெண்ணெய்யை பாட்டிலில் கொண்டுவந்து இப்படி ஒரு மோசமான முடிவை எடுத்திருக்கிறார். மாணவிக்கு உரிய கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs