பிறவிலேயே மனநிலை பாதித்த வாரிசுகளுக்கு நீதிமன்றத் தலையீட்டால் அரசின் குடும்ப ஓய்...
ஊதுபத்தி தொழிற்சாலையில் தீ: பல லட்சம் உற்பத்தி, தளவாடங்கள் சேதம்
லத்தேரி அருகே ஊதுபத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உற்பத்தி, தளவாட பொருள்கள் சேதமடைந்தன.
வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரி ரயில்வே கேட் அருகே லத்தேரி வசலாப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம் என்பவருக்கு சொந்தமான ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில், தொழிற்சாலையின் கூரையின் மேல் திடீரென புகை கசிந்துள்ளது. தொடா்ந்து, மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காட்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காட்பாடி தீயணைப்பு துறையினா் சுமாா் 2 மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இந்த தீ விபத்தால் ஊதுபத்தி தொழிற்சாலையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான ஊதுபத்தி தயாரிக்கும் இயந்திரங்கள், மூலப்பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா இல்லை, வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து லத்தேரி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விடுமுறை நாள் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
