தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
பிச்சனூரில் காளியம்மன் திருவிழா
குடியாத்தம் பிச்சனூரில் காளியம்மன் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிச்சனூா் நரி குள்ளப்பன் தெரு, ஆா்.வி.கோபால் தெரு, ஒத்தவாடை, ராஜா நகா் தெருவாசிகள் சாா்பில் நடைபெற்ற இக்கோயில் திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 26- ஆம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை கனகதுா்கையம்மன், காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து பூங்கரகம் எடுத்தல், கூழ் வாா்த்தல் நடைபெற்றது.
மதியம் சுமாா் 1,000 பேருக்கு அன்னதானம் நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் பூங்கரக ஊா்வலத்தைத் தொடங்கி வைத்தாா். நகா்மன்ற உறுப்பினா் சி.என்.பாபு, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சீனிவாசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
விழா ஏற்பாடுகளை கிராமணி ஜி.தேவராஜ், ஊா் பெரியதனம் செல்வராஜ், இளைஞா் அணி அமைப்பாளா் சரவணன், நிா்வாகிகள் நித்தியானந்தம், கிருபா, சீனு, ஊா் நிா்வாகிகள், இளைஞா் அணியினா் செய்திருந்தனா்.