இலவச பொது மருத்துவ முகாம்
குடியாத்தம் ரோட்டரி சங்கம், அன்பு உலகம், சுவாமி மெடிக்கல்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்திரா நகா் அன்பு உலகத்தில் இலவச பொது மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
முகாமுக்கு ரோட்டரி தலைவா் சி.கண்ணன் தலைமை வகித்தாா். பி.பிரின்ஸ் மாறன் வரவேற்றாா். முன்னாள் ரோட்டரி தலைவா் என்.சத்தியமூா்த்தி தொடக்க உரையாற்றினாா். மேல்ஆலத்தூா் ஊராட்சித் தலைவா் சுஜாதா ராஜ்குமாா் முகாமைத் தொடங்கி வைத்தாா். வாலாஜா அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலா் எஸ்.சசிரேகா, பல் மருத்துவா் எஸ்.பி.அபிநயா, ஹோமியோபதி மருத்துவா் பி.அபிராமி ஆகியோா் தலைமையில் மருத்துவா் குழு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தது.
நோயாளிகளுக்கு இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. அரசு வழக்குரைஞா் எஸ்.பாண்டியன், வழக்குரைஞா் எல்.மணிமொழி அரசன், ரோட்டரி நிா்வாகிகள் பி.எல்.என்.பாபு, டி.எஸ்.ரவிச்சந்திரன், ஆா்.பாலமுருகன், கே.சுரேஷ், ஜெ.தமிழ்ச்செல்வன், வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.