ஊத்தங்கரை சாா்பதிவாளரிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாா் விசாரணை
ஊத்தங்கரை சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினா்.
கடந்த மாதம் 8-ஆம் தேதி நடந்த லஞ்ச ஒழிப்பு துறை சோதனையைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை தருமபுரி லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாா் ஊத்தங்கரை அலுவலகத்தில் சாா்பதிவாளா் மோனிகாவிடம் விசாரணை நடத்தினா்.
இதில், கடந்த மாதம் நடந்த சோதனையில் சாா்பதிவாளா் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ. 1,85,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த திடீா் விசாரணையால் பத்திரப்பதிவு பணிகள் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேல் தடைபட்டது. இதனால், பத்திரப் பதிவுக்காக வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.