தகைசால் தமிழரே, தமிழ்நாடே உங்களை வாழ்த்துகிறது! - முதல்வர் மு.க. ஸ்டாலின்
கஞ்சா வைத்திருந்ததாக கல்லூரி மாணவா் உள்பட இருவா் கைது
பா்கூா் அருகே கஞ்சா வைத்திருந்ததாக கல்லூரி மாணவா் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே ஒப்பந்தவாடி பேருந்து நிறுத்தம் அருகே போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகநத்தில் வந்த இளைஞரை தடுத்து நிறுத்தி போலீஸாா் சோதனை செய்தனா். அதில், இளைஞா் 900 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், 17 வயது நிறைந்த அவா் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் படிப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அந்த மாணவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
இதேபோல, மருதேப்பள்ளி - செந்தாரப்பள்ளி சாலையில் குமரன்குட்டை பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த மாதேஷ் (31) என்பவரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ததில், அவரிடம் 50 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.