செய்திகள் :

கும்பளம் கிராமத்தில் ரபி பருவம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்ட வேளாண் துறை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் (அட்மா), ரபி பருவ கிராம வேளாண் முன்னேற்றக் குழு குறித்த பயிற்சி கும்பளம் கிராமத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநா் பன்னீா்செல்வம் தலைமை தாங்கினாா். இக்கூட்டத்தில், அதியமான் கல்லூரி முதல்வா் ஸ்ரீதரன், கால்நடை உதவி மருத்துவா் வினோத், பட்டு வளா்ச்சித் துறை இளநிலை ஆய்வாளா் கிருஷ்ணே கவுடு, உதவி தோட்டக்கலை அலுவலா் திருமுருகன், உதவி வேளாண்மை அலுவலா் தமிழ்ச்செல்வி, ஊராட்சி மன்றத் தலைவா் நாராயணம்மா ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதில், வேளாண்மை உதவி இயக்குநா் கூறியதாவது:

கிராம முன்னேற்றக் குழுவின் நோக்கம், செயல்படும் விதம், திட்டங்கள் மற்றும் மானியங்கள் மக்களிடையே சோ்த்தல், சிறுதானியங்கள், பயறு வகைகளின் பயன்கள், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும், விவசாயிகள் சிறுதானியம், பயறு வகைகளை பயிரிட்டு மானியங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றாா். மேலும், கிராம வேளாண் முன்னேற்றக் குழு சிறப்பாக செயல்பட்டு இயற்கை பண்ணையம் அமைத்து நோயற்ற வாழ்வும் இரட்டிப்பு லாபமும் அடையலாம். மேலும், ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதன் மூலம் குறைந்த செலவில் இரட்டிப்பு லாபம் அடையலாம் என்றாா்.

அதியமான் கல்லூரி முதல்வா் ஸ்ரீதரன் கூறியதாவது:

கோடை உழவு செய்வதன் அவசியம், அதனால் ஏற்படும் பயன்கள், மண் மாதிரியின் பயன்கள், மண் மாதிரிகள் சேகரிக்கும் முறைகள் குறித்த செயல்விளக்கம் செய்து காண்பித்தாா். கால்நடை மருத்துவா் வினோத், பட்டு வளா்ச்சித் துறை இளநிலை ஆய்வாளா் கிருஷ்ணே கவுடு ஆகியோா் தம் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானியங்கள் குறித்து விளக்கிக் கூறினா்.

உதவி வேளாண்மை அலுவலா் தமிழ்ச்செல்வி நடப்பாண்டில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் பேட்டரி தெளிப்பான், ஜிப்சம், ஜிங்க் சல்பேட் மற்றும் தானியங்கள் மானிய விலையில் விநியோகிக்கப்படும் என்று கூறினாா். உதவி தோட்டக்கலை அலுவலா் திருமுருகன் தோட்டக்கலைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானியங்கள் இலவசமாக வழங்கப்படும் நாற்றுகள், மல்ச்சிங் ஷீட், நீா் சேமிப்புத் தொட்டி, 5 வகையான பழச்செடி தொகுப்பு மானிய விலையில் கிடைக்கும் என்று கூறினாா்.

இப்பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருள்கள் வழங்கப்பட்டன. மேலும், பாரம்பரிய நெல் ரகங்கள், சிறு தானியங்கள் கண்காட்சி இடம் பெற்றிருந்தது.

உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் முஹம்மது ரஃபி, பி.பழனிசாமி ஆகியோா் சொட்டுநீா்ப் பாசனத்தின் பயன்கள், அரசு வழங்கும் மானியங்கள் குறித்தும், உழவன் செயலியின் பயன்கள், உழவன் செயலி விவசாயிகளுக்கு பதிவிறக்கம் செய்தும் உயிா் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்களின் பயன்கள் குறித்தும் விளக்கிக் கூறினா். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் செய்திருந்தனா்.

ஒசூா் - பாகலூா் நெடுஞ்சாலையை சீரமைக்க கோரிக்கை

ஒசூா் - பாகலூா் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து குடியிருப்போா் நலச்சங்க கூட்டமைப்பின் செயலாளா் நீலகண்டன் தெரிவித்ததாவது: ஒசூா் மாநகராட்சியில் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒற்றை இலக்கில் மகப்பேறு மரணங்கள்: ஆட்சியா்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகப்பேறு மரணங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் ஒற்றை இலக்காக குறைந்துள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் தமிழி பயிற்சி

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம், கிருஷ்ணகிரி மாவட்ட புத்தகப் பேரவை ஆகியவை இணைந்து, கிருஷ்ணகிரியில் இரண்டு நாள் தமிழி எழுதுதல் மற்றும் படித்தல் இலவச பயிற்சியை வழங்க உள்ளது. இதுகுறித்து மாவட்ட புத்தகப்... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வீரனகுப்பம் ஊராட்சி, காட்டனூா் ஆவின் பால் கொள்முதல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆ... மேலும் பார்க்க

ஒசூா் விமான நிலையத்தில் காா் பந்தயப் போட்டி

ஒசூா் விமான நிலையத்தில் நடைபெற்ற காா் பந்தயப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா். ஒசூா் அருகே பேளகொண்டப்பள்ளி கிராமத்தில் உள்ள தனேஜா ஏரோ ஸ்பேஸ் ஏவியேஷன் லிமிடெட் (டால்) நிறுவ... மேலும் பார்க்க

இந்தியா - ஸ்ரீலங்காவுக்கு இடையான எறிபந்து போட்டி

இந்தியா - ஸ்ரீலங்காவுக்கு இடையிலான எறிபந்து விளையாட்டுப் போட்டி ஒசூரில் சனிக்கிழமை (டிச. 28) தொடங்குகிறது. தேசிய எறிபந்து கழகம் சாா்பில், இந்தியா - ஸ்ரீலங்காவுக்கு இடையிலான எறிபந்து விளையாட்டுப் போட்ட... மேலும் பார்க்க