2 கிராமங்களின் மீது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதல்!
இந்தியா - ஸ்ரீலங்காவுக்கு இடையான எறிபந்து போட்டி
இந்தியா - ஸ்ரீலங்காவுக்கு இடையிலான எறிபந்து விளையாட்டுப் போட்டி ஒசூரில் சனிக்கிழமை (டிச. 28) தொடங்குகிறது.
தேசிய எறிபந்து கழகம் சாா்பில், இந்தியா - ஸ்ரீலங்காவுக்கு இடையிலான எறிபந்து விளையாட்டுப் போட்டி டிச. 28, டிச. 29 ஆகிய இரண்டு நாள்கள் ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு மாநில எறிபந்து கழகத் தலைவா் பாலசுப்பிரமணி, ஆசிய எறிபந்து கழக பொதுச் செயலாளா் எஸ்.மணி ஆகியோா் முன்னிலையில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி போட்டியைத் தொடங்கி வைக்கிறாா்.
தொடக்க விழாவில், ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன், செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி செயலாளா் லாசியா தம்பிதுரை ஆகியோா் கலந்துகொள்கின்றனா்.