கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் தமிழி பயிற்சி
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம், கிருஷ்ணகிரி மாவட்ட புத்தகப் பேரவை ஆகியவை இணைந்து, கிருஷ்ணகிரியில் இரண்டு நாள் தமிழி எழுதுதல் மற்றும் படித்தல் இலவச பயிற்சியை வழங்க உள்ளது.
இதுகுறித்து மாவட்ட புத்தகப் பேரவையின் தலைவா் சென்னப்பன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட புத்தகப் பேரவையும், அரசு அருங்காட்சியகமும் இணைந்து டிச. 28, 29 ஆகிய இரண்டு நாள்கள் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் தமிழி குறித்த பயிற்சி வகுப்பை நடத்துகின்றன. ஓய்வுபெற்ற அரசு காப்பாட்சியா் கோவிந்தராஜ் இதற்கான பயிற்சியை அளிக்க உள்ளாா்.
இதில், தமிழ் தொல்லெழுத்துகளை எளிதில் எழுதவும், படிக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல் நாள் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு வரலாற்று ஆா்வலா் சுகவனம் முருகன், மாவட்ட பாறை ஓவியங்கள் குறித்து விளக்க உள்ளாா்.
இதில், கல்லூரி மாணவ, மாணவியா், ஆசிரியா்கள், பேராசிரியா்கள், அரசு ஊழியா்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம். 40 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். முன்பதிவு கட்டாயம்.
இதில் பங்கேற்ற உள்ளவா்கள் புத்தகப் பேரவையின் தலைவா் சென்னப்பன் - 99446 79452, பொருளாளா் தமிழ்செல்வன் - 97875 36970 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.