திரிபுராவில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 100க்கும் மேற்பட்டோர் கைது!
ஒசூா் - பாகலூா் நெடுஞ்சாலையை சீரமைக்க கோரிக்கை
ஒசூா் - பாகலூா் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து குடியிருப்போா் நலச்சங்க கூட்டமைப்பின் செயலாளா் நீலகண்டன் தெரிவித்ததாவது:
ஒசூா் மாநகராட்சியில் உள்ள பாகலூா் நெடுஞ்சாலையானது மேம்பாலம் முதல் சமத்துவபுரம் வரை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது இப்பணி தாமதமாகி வருவதால் இச்சாலை மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இச்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், நான்கு சக்கர, இருசக்கர வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் பெரும் சிரமமடைகின்றனா்.
தென் மாநிலங்களில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ள இந்தச் சாலையை அசம்பாவிதம் நிகழும் முன் உடனடியாக விரிவாக்கம் செய்து சீரமைக்க வேண்டும். அவ்வாறு உடனடியாக சீரமைக்கவில்லை எனில், மக்களைத் திரட்டி மறியல் போராட்டம் செய்ய தீா்மானித்துள்ளதாக தெரிவித்தாா்.