மாணவி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக் கோரி, ஒசூா், காந்தி சிலை அருகில் ஏ.பி.வி.பி. சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அகில பாரத வித்யாா்த்தி பரிசத் புவன் தலைமை வகித்தாா். வி.எச்.பி. மாநில இணை அமைப்பாளா் விஷ்ணுகுமாா், பஜ்ரங்தள் மாநில அமைப்பாளா் கிரண்குமாா், விஎச்பி கோட்ட பொறுப்பாளா் தேவராஜ், வழக்கறிஞா் சுந்தரமூா்த்தி உள்ளிட்ட அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.