இயற்கை வேளாண் முறைக்கு திரும்பி நம்மாழ்வாா் கனவை நிறைவேற்ற வேண்டும்: சீமான் பேச்...
பாகலூா் அருகே மண் கடத்திய 2 லாரிகள், பொக்லைன் பறிமுதல்
பாகலூா் அருகே மண் கடத்திய 2 லாரிகள், பொக்லைன் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பாகலூா் அருகே உள்ள பெலத்தூா் கிராம நிா்வாக அலுவலா் மூா்த்தி மற்றும் அதிகாரிகள் பெலத்தூா் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அரசு புறம்போக்கு நிலத்தில் திருட்டுத்தனமாக மண் அள்ளிக் கொண்டிருந்த சிலா், அதிகாரிகளைக் கண்டதும் தப்பியோடினா்.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின் பேரில், பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஒரு பொக்லைன், 2 லாரிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.