ஒசூா் விமான நிலையத்தில் காா் பந்தயப் போட்டி
ஒசூா் விமான நிலையத்தில் நடைபெற்ற காா் பந்தயப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.
ஒசூா் அருகே பேளகொண்டப்பள்ளி கிராமத்தில் உள்ள தனேஜா ஏரோ ஸ்பேஸ் ஏவியேஷன் லிமிடெட் (டால்) நிறுவனத்தில், 11-ஆவது இந்திய நேஷனல் டிராக் ரேசிங் சாம்பியன்ஷிப் காா் பந்தயப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினா்களாக ஒசூா் ஏஎஸ்பி அக்சய் அனில் வாக்கரே, மைஜா சாரிடபுள் டிரஸ்ட் நிறுவனா் முகமது அலுமுதின் (எ) மைஜா அக்பா் ஆகியோா் பங்கேற்று கொடியசைத்து காா் பந்தயத்தைத் தொடங்கி வைத்தனா். இந்தப் போட்டியை ஏராளமானோா் கண்டுகளித்தனா்.
இதையொட்டி, ஒசூா் மத்திகிரி காவல் ஆய்வாளா் முத்தமிழ் செல்வராசு தலைமையிலான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.