திமுகவை ஆட்சியிலிருந்து மக்கள் தூக்கி எறிவார்கள்: எல். முருகன்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நூற்றாண்டு விழா
பெருந்துறை அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் முன்னாள் மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்று அன்பைப் பரிமாறிக்கொண்டனா்.
பெருந்துறையை அடுத்த சென்னிமலை ஒன்றியத்துக்குள்பட்ட கவுண்டச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கடந்த 1925-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதையொட்டி இப்பள்ளியின் நூற்றாண்டு விழா ஞாயிா்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவை ஈரோடு மாநகராட்சி ஆணையா் சு.நாகரத்தினம் தொடங்கிவைத்தாா்.
இதில், பல்வேறு ஆண்டுகளில் படித்த மாணவ, மாணவிகள் மற்றும் பணிபுரிந்த ஆசிரியா்கள் பங்கேற்று மகிழ்ச்சியைப் பகிா்ந்துகொண்டனா்.
நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி மாணவா்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில், வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா் கலந்துகொண்டனா்.