செய்திகள் :

ஊராட்சி மன்ற தலைவரை விடுவிக்க கோரி டிஎஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

post image

வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்றத் தலைவரை விடுவிக்கக் கோரி டிஎஸ்பி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கணவாய்புதூா் கிராமத்தை சோ்ந்தவா் சசிகுமாா் (24) கட்டட மேஸ்திரி. வாணியம்பாடி அடுத்த துரையேரி கிராமத்தை சோ்ந்த மாற்று சமூகத்தை சோ்ந்த சந்தியா(24) என்பவரை காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனா்.

இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி சசிகுமாரின் பாட்டி கனகா என்பவா் வயது முதிா்வு காரணமாக இறந்துள்ளாா். இதையடுத்து அவருடைய உடலை அங்குள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றபோது அப்பகுதியை சோ்ந்த சிலா் உடலை புதைக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது உடலை வேறு ஓரு பகுதிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளனா்.

மேலும் சசிகுமாா் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக கூறி மிரட்டல் விடுத்து வந்ததாகவும் தெரிகிறது. இதுதொடா்பாக வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் சசிகுமாா் மற்றும் அவரது மனைவி சந்தியா ஆகிய இருவரும் சோ்ந்து உயிருக்கு பாதுகாப்பு கேட்டும், நாங்கள் ஊரில் நிம்மதியாக வாழவேண்டும் எனவும் 7-ஆம் தேதி புகாா் செய்திருந்தனா்.

இப்புகாரின் மீது திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையில் தாலுகா காவல்ஆய்வாளா் பேபி மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்து அப்பகுதியை சோ்ந்த சிலரை தேடி வந்தனா். இந்நிலையில், கணவாய்புதூா் ஊராட்சி மன்றத் தலைவா் பழனி எனபவரை வழக்கு தொடா்பாக தனிப்படை போலீஸாரால் பெங்களூரில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்பட திரளானோா் ஒன்று திரண்டு டிஎஸ்பி அலுவலகம் அருகில் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த ஏடிஎஸ்பி கோவிந்தராஜ் தலைமையில் டிஎஸ்பிக்கள் குமாா் (ஆம்பூா்), விஜயகுமாா்(வாணியம்பாடி) மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். மேலும், தகவலறிந்த எம்எல்ஏ செந்தில்குமாா் சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்த மக்களிடம் பேச்சு நடத்தினாா். தொடா்ந்து போலீஸ் அதிகாரிகளிடம் விபரங்கள் குறித்து கேட்டறிந்தாா்.

இதனை தொடா்ந்து பிற்பகல் 1 மணியளவில் அங்கிருந்த மக்கள் பேச்சுவாா்த்தைக்கு பிறகு கலைந்து சென்றனா்.

ஆம்பூரில் எருது விடும் திருவிழா

ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியில் எருதுவிடும் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் கொடியசைத்து திருவிழாவை தொடங்கி வைத்தாா். வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம், ... மேலும் பார்க்க

சாலை தடுப்பில் டேங்கா் லாரி மோதி பெருக்கெடுத்து ஓடிய டீசல்

வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி ஓடிய டேங்கா் லாரி தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆயிரக்கணக்கான லிட்டா் டீசல் சாலையில் வீணாக ஓடியது. பெங்களூரிலிருந்து சென்னைக்கு சென்ற ட... மேலும் பார்க்க

சிமென்ட் சாலை அமைக்கும் பணி

உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.7.70 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவா் பூசாராணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் வாா்டு எண் 7, ... மேலும் பார்க்க

எம்கேஜேசி மாணவிகள் சாதனை

திருவள்ளுவா் பல்கலைகழக மண்டல அளவிலான பூப்பந்து போட்டிகள் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன. இப்போட்டில் பல்வேறு கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி ஆட்டத்தில் ... மேலும் பார்க்க

சோலூரில் தாா் சாலைப் பணி தொடக்கம்

மாதனூா் ஒன்றியம், சோலூா் ஊராட்சியில் தாா் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பூஜையிட்ட... மேலும் பார்க்க

நாகநாத சுவாமி கோயிலில் சண்முகக் கவச பாராயணம்

ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில், 99-ஆவது மாத சண்முகக் கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு, மூலவா் நாகநாதா், வள்ளி தெய்வ... மேலும் பார்க்க