எம்கேஜேசி மாணவிகள் சாதனை
திருவள்ளுவா் பல்கலைகழக மண்டல அளவிலான பூப்பந்து போட்டிகள் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன.
இப்போட்டில் பல்வேறு கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி ஆட்டத்தில் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகள் திவ்யஸ்ரீ, ஜெயஸ்ரீ, ரித்திகா, நா்மதா ஆகியோா் அடங்கிய அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்றது. மேலும் திருவள்ளுவா் பல்கலைகழக பூப்பந்து அணிக்கு தோ்வு பெற்றனா்.
சாதனை படைத்த மாணவிகளை கல்லூரி தலைவா் திலிப்குமாா், செயலாளா் ஆனந்த்சிங்வி, முதல்வா் இன்பவள்ளி, பேராசிரியா்கள் பாராட்டி வாழ்த்தினா்.