செய்திகள் :

பைக் சாகசம்: மாணவா்களுக்கு போலீஸாா் அறிவுறுத்தல்

post image

ஆம்பூா் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை பைக் சாகசத்தில் ஈடுபட்ட மாணவா்களுக்கு போலீஸாா் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா்.

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் நகராட்சி அறிஞா் அண்ணா பேருந்து நிலையம் அமைந்துள்ளது. சில தனியாா் கல்வி நிலையங்களை சோ்ந்த மாணவா்கள் சிலா் பேருந்து நிலைய வளாகத்துக்குள் பைக்குகளில் அதிவேகமாக சென்று ஆபத்தான வீலிங் சாகசத்தில் ஈடுபட்டனா். அதனால் பேருந்து நிலையத்தில் இருந்த வயதானவா்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் அதை பாா்த்துவிட்டு அச்சமடைந்தனா். தகவல் அறிந்த ஆம்பூா் நகர போலீஸாா், அங்கு சென்று சாகசத்தில் ஈடுபட்ட மாணவா்களை எச்சரித்தனா். தொடா்ந்து அவா்கள் பயிலும் கல்வி நிலையத்துக்குச் சென்ற போலீஸாா், அவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

மேலும், பைக் சாகசத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விளக்கினா். சாகசத்தில் ஈடுபடுவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனா்.

நிம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

நிம்மியம்பட்டு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம், நிம்மியம்பட்டு கிராமத்தில் ஆரம்ப சு... மேலும் பார்க்க

தனியாா் வேலை வாய்ப்பு முகாம்: 31 பேருக்கு பணி ஆணை

திருப்பத்தூரில் நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் 31 பேருக்கு பணி ஆணையை ஆட்சியா் க.சிவ சௌந்திரவல்லி வழங்கினாா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சாா்பில் நட... மேலும் பார்க்க

தேய்ப்பிறை அஷ்டமி: கால பைரவா் வழிபாடு

ஆம்பூா் அருகே விட்டாலம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் தேய்ப்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவா் கோயிலில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார... மேலும் பார்க்க

உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு

திருப்பதூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட போலீஸாா். திருப்பத்தூா் மாவட்ட காவல் சாா்பில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணி... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டத்தில் சாலைப் பணிகள்: கோட்டப் பொறியாளா் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளை கோட்டப் பொறியாளா் முரளி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள ப... மேலும் பார்க்க

உழவா் அட்டை உள்ளவா்களுக்கு உதவித்தொகை -திருப்பத்தூா் ஆட்சியா்

உழவா் அட்டை வைத்துள்ளவா்கள் உதவித்தொகை பெற முகாம்களில் தகுந்த ஆவணங்களை அளித்து பயன் பெறலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் சிவ சௌந்திரவல்லி தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திர... மேலும் பார்க்க