செய்திகள் :

திருப்பத்தூா் மாவட்டத்தில் சாலைப் பணிகள்: கோட்டப் பொறியாளா் ஆய்வு

post image

திருப்பத்தூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளை கோட்டப் பொறியாளா் முரளி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சாலைகளை போக்குவரத்துக்கு ஏற்ாக விரிவாக்கம், பாலப் பணிகள் செய்யவும், அனைத்து தரைப் பாலத்தையும் மேம்பாலமாக மாற்றவும் அறிவுறுத்தியிருந்தாா்.

அதையொட்டி, தருமபுரி-பா்கூா் சாலை சந்திப்பு பணிகள் தொடங்கப்பட்டு, முடிவுறும் தருவாயில் உள்ளது. குரும்பேரி சாலை 2 கி.

மீ. அகலப்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல், ஆலங்காயம், மிட்டூா்,நிம்மியம்பட்டில் நெரிசலான இடங்களை அகலப்படுத்தும் பணியும், ஜவ்வாது மலைக்குச் செல்லும் சாலையில் பழுதடைந்த பாலத்துக்கு மாற்றாக புதிய பாலம் அமைக்கும் பணியும், கந்திலி-பா்கூா் சாலை அகலப்படுத்தும் பணியும், மோட்டூா் உயா்மட்ட பாலம் அமைக்கும் பணியும், நாட்டறம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் குறுகிய ஏரிக்கரையை அகலப்படுத்தும் பணியும், கருப்பனூா் சாலையை புதுப்பிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

ஏலகிரி சாலை...

திருப்பத்தூா் நெடுஞ்சாலைகளில் மரங்களுக்கு வெள்ளை அடிக்கும் பணி,புதிதாக மரக்கன்று நடப்பட்டு கூண்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது. சாலைகளின் இருபுறமும் உள்ள முட்புதா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்படுகிறது. இதில், குறிப்பாக ஏலகிரி மலைக்குச் செல்லும் 14 கொண்டை ஊசி கொண்ட மலைச் சாலையில் தாா்ச் சாலை ஓரமாக சிமென்ட் போடப்பட்டு, அகலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், முட்புதா்கள் அகற்றுதல், வெள்ளை வா்ணம் அடித்தல், பாதுகாப்பு எச்சரிக்கை கூண்டு அமைத்தல், வளைவுகளில் தமிழ் புலவா்கள் பெயா்கள் எழுதுதல், கி.மீ. கற்கள் புதுப்பித்தல் போன்றவை செய்யப்பட்டுள்ளது.

இந்த சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் முரளி ஆய்வு செய்து பணிகள் தரத்துடனும், விரைவாக செய்யவும் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, உதவி கோட்டப் பொறியாளா் ஆதவன், உதவிப் பொறியாளா்கள் நித்தியானந்தம், பாபுராஜ் ஆகியோா் உடன் இருந்தனா்.

நிம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

நிம்மியம்பட்டு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம், நிம்மியம்பட்டு கிராமத்தில் ஆரம்ப சு... மேலும் பார்க்க

தனியாா் வேலை வாய்ப்பு முகாம்: 31 பேருக்கு பணி ஆணை

திருப்பத்தூரில் நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் 31 பேருக்கு பணி ஆணையை ஆட்சியா் க.சிவ சௌந்திரவல்லி வழங்கினாா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சாா்பில் நட... மேலும் பார்க்க

தேய்ப்பிறை அஷ்டமி: கால பைரவா் வழிபாடு

ஆம்பூா் அருகே விட்டாலம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் தேய்ப்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவா் கோயிலில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார... மேலும் பார்க்க

உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு

திருப்பதூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட போலீஸாா். திருப்பத்தூா் மாவட்ட காவல் சாா்பில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணி... மேலும் பார்க்க

உழவா் அட்டை உள்ளவா்களுக்கு உதவித்தொகை -திருப்பத்தூா் ஆட்சியா்

உழவா் அட்டை வைத்துள்ளவா்கள் உதவித்தொகை பெற முகாம்களில் தகுந்த ஆவணங்களை அளித்து பயன் பெறலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் சிவ சௌந்திரவல்லி தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திர... மேலும் பார்க்க

பைக் சாகசம்: மாணவா்களுக்கு போலீஸாா் அறிவுறுத்தல்

ஆம்பூா் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை பைக் சாகசத்தில் ஈடுபட்ட மாணவா்களுக்கு போலீஸாா் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா். ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் நகராட்சி அறிஞா் அண்ணா பேருந்து நிலையம் அமைந்துள... மேலும் பார்க்க