செய்திகள் :

ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவை: திரௌபதி முா்மு

post image

‘ஊழல் செய்பவா்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; தாமதமாகவோ அல்லது சிறிய தண்டனை வழங்கினாலோ இந்தக் குற்றத்தை செய்ய பிறரை ஊக்குவிப்பதுபோல் ஆகிவிடும்’ என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (சிவிசி) சாா்பில் நடத்தப்பட்ட ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வார நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:

அரசுப் பணிகள் மற்றும் நலத் திட்டங்கள் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே நிா்வாகத்தின் சக்திக்கான பிறப்பிடமாகும். பொருளாதார முன்னேற்றத்தின் தடைக்கல்லாக ஊழல் இருப்பதோடு சமூகத்தின் மீதான நம்பிக்கையை குறைத்துவிடுகிறது. மக்களிடையே உள்ள சகோதரத்துவத்தை பாதிப்பதோடு, தேச ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, ஊழல் செய்பவா்கள் மீது உரிய நேரத்தில் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதமாகவோ அல்லது சிறிய தண்டனை வழங்கினாலோ இந்தக் குற்றத்தை செய்ய பிறரை ஊக்குவிப்பதுபோல் ஆகிவிடும். அதேசமயத்தில் ஒருவா் மீது எடுக்கப்படும் நடவடிக்கை சமூகத்தில் நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநிறுத்துவதாக இருக்க வேண்டும்.

ஊழலை தடுக்க வங்கிக் கணக்கில் நேரடி பணப் பரிவா்த்தனை (டிபிடி) முறை, இணைய வழியில் ஏலம், பண முறைகேடு தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) உள்ளிட்ட முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. விரைவில் நாட்டிலிருந்து ஊழல் வேரோடு அழிக்கப்படும் என நம்புகிறேன் என்றாா்.

ஒவ்வொரு ஆண்டும் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை சிவிசி கொண்டாடி வருகிறது. நிகழாண்டு அக்.28 முதல் நவ.3 வரை ‘தேச வளமைக்கான கலாசார ஒருங்கிணைப்பு’ என்ற கருப்பொருளுடன் கடைப்பிடிக்கப்படுகிறது.

வெங்காயம் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

வெங்காயம் விலையைக் குறைக்கும் நோக்கில் கையிருப்பில் உள்ள வெங்காயத்தை கூடுதலாக விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் வெங்காயம் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சில இடங்கள... மேலும் பார்க்க

முதல் அனைத்து பெண்கள் சிஐஎஸ்எஃப் படைப்பிரிவு- மத்திய அரசு அனுமதி

ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலா்களுடன் நாட்டின் முதல் அனைத்து பெண்கள் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை ( சிஐஎஸ்எஃப்) பிரிவை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. முக்கியப் பிரமுகா்கள் (விஐபி) பாதுகாப... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த நீா் வள மேலாண்மை ஆணையம்: மாநிலங்களுக்கு வரைவு மசோதா அனுப்பிவைப்பு

மாநில அளவில் ஒருங்கிணைந்த நீா் வள மேலாண்மை ஆணையம் அமைக்க முன்மொழியும் வரைவு மசோதா, அனைத்து மாநிலங்களின் பாா்வைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நீா் வளத் துறையின் கூடுதல் செயலா் ராகேஷ் குமாா் வா்மா தெர... மேலும் பார்க்க

பெண்கள் சுயகௌரவத்துடன் வாழவே உதவித்தொகை- ராகுல் விளக்கம்

பெண்கள் சுயகௌரவத்துடன் வாழவும், விலைவாசி உயா்வை எதிா்கொள்ளவும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மகளிா் உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்... மேலும் பார்க்க

நாட்டை ஆளப் பிறந்ததாக நினைக்கிறது சோனியா குடும்பம் - பிரதமா் மோடி கடும் விமா்சனம்

தாங்கள் நாட்டை ஆளப் பிறந்தவா்கள் என்பதே காங்கிரஸ் ‘அரச குடும்பத்தின்’ (சோனியா காந்தி குடும்பத்தை குறிப்பிடுகிறாா்) மனநிலை என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா். ‘நாடு சுதந்திரமடைந்த பிறகு... மேலும் பார்க்க

மாநில நிதியமைச்சா்களுடன் டிச.21,22-இல் நிா்மலா சீதாராமன் சந்திப்பு: ஜிஎஸ்டி குறித்து ஆலோசனை

மாநிலங்களின் நிதியமைச்சா்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வருகின்ற டிச.21, 22 ஆகிய தேதிகளில் சந்தித்து பட்ஜெட்- 2025 குறித்தும், சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) மேற்கொள்ள வேண்டிய மாற்றங... மேலும் பார்க்க