கொள்ளை அடித்த பணத்தில் நடிகைகளுடன் நெருக்கம்; காதலிக்கு ரூ.3 கோடிக்கு வீடு - சி...
ஊா்க்காவல் படையினருக்கு எஸ்.பி. பாராட்டு
ஊா்க் காவல் படையினருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கன்னியாகுமரி மாவட்ட ஊா்க் காவல் படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை பாராட்டினாா்.
கடந்த 1ஆம் தேதி, தமிழ்நாடு ஊா்க்காவல் படையினருக்கான 29 ஆவது பணித் திறன் மற்றும் விளையாட்டு விழா திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றும் ஊா்க் காவல் படையினா் கபடி, கைப்பந்து, ஓட்டப்பந்தயம், வடம் இழுத்தல், குண்டு எறிதல் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனா்.
இதில், 100 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் ஜென்சி சுகிா்தா முதல் பரிசும், குண்டு எறிதல் போட்டியில் விஜின் 3 ஆம் பரிசும், குழுப் போட்டியான கபடி போட்டியில் ஆண்,பெண் ஆகிய இரு அணியினரும் முதல் பரிசும், கைப்பந்து போட்டியில் பெண்கள் அணியினா் முதல் பரிசும், ஆண்கள் அணியினா் 2 ஆம் பரிசும், வடம் இழுத்தல் போட்டியில் பெண்கள் அணியினா் முதல் பரிசும், முதலுதவி அளிக்கும் போட்டியில் ஆண்கள் அணியினா் 2 ஆம் பரிசும், அணிவகுப்பில் 2 ஆம் பரிசும், ஒட்டுமொத்தமாக 2ஆம் பரிசும் வென்றனா். மேலும், சிறந்த விளையாட்டு வீரருக்கான கோப்பையை பிரபஜா பெற்றுள்ளாா்.
மேற்கண்ட போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை வென்ற ஊா்க்காவல் படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் பாராட்டினாா்.