வேலூர் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு 20 ஆ...
எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் லாபம் 22 சதவிகிதம் சரிவு!
புதுதில்லி: பேட்டரி உற்பத்தியாளரான எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் டிசம்பர் 31, 2024 உடன் முடிவடைந்த 3 வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 22 சதவிகிதம் சரிந்து ரூ.158 கோடியாக உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.203 கோடியாக இருந்தது. செயல்பாட்டு வருவாய் ரூ.3,980 கோடியிலிருந்து 3 வது காலாண்டில் ரூ.4,017 கோடியாக உயர்ந்துள்ளது.
3வது காலாண்டில் ஒட்டுமொத்த விற்பனை சமமாக இருந்தாலும், பிற மேக்ரோ பொருளாதார காரணிகளின் மந்தநிலை காரணமாக, வாகன மாற்று மற்றும் வாகன ஏற்றுமதி சந்தை பிரிவுகளில் நம்பிக்கைக்குரிய வளர்ச்சியை நாங்கள் பதிவு செய்துள்ளோம் என்றார் எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அவிக் ராய்.
தற்போதைய லித்தியம் அயன் செல் உற்பத்தி திட்டம் நிறைவடைவதை உறுதி செய்ய நிறுவனத்தின் குழு அயராது உழைத்து வருகிற நிலையில் அடுத்த நிதியாண்டில் இது குறித்த செயல்பாடுகளை நாங்கள் வணிகமயமாக்க விரும்புகிறோம் என்றார்.
மும்பை பங்குச் சந்தையில் எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் இன்று 1.28 சதவிகிதம் சரிந்து ரூ.343.35 ஆக வர்த்தகமானது.
இதையும் படிக்க: டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம் 20% அதிகரிப்பு!