செய்திகள் :

`எக்ஸ்ரேவுக்கு பதில் ஜெராக்ஸ்' நோயாளி, முன்னாள் அமைச்சர் விமர்சனம்... மருத்துவ அதிகாரி விளக்கம்!

post image

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிபாண்டி. இவர் உணவகம் ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், காளிபாண்டி டூவீலரில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து விபத்தில் சிக்கினார். இதில் அவரின் கையில் பலத்த அடிபட்டதில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர், சிகிச்சைக்காக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், எலும்பு முறிவு எந்த அளவுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய எக்ஸ்ரே எடுத்துவருமாறு பரிந்துரைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள எக்ஸ்ரே மையத்திற்கு சென்ற காளிபாண்டி, மருத்துவர்கள் அறிவுறுத்தியபடி எக்ஸ்ரே எடுத்துள்ளார்.

காளிபாண்டி

அச்சமயத்தில், நோயாளியின் வசதிக்காக எக்ஸ்ரே ரிப்போர்ட்டை மருத்துவமனை பணியாளர்கள் வழங்கியுள்ளனர். இந்த ரிப்போர்ட், எக்ஸ்ரே ஃபிலிம் ஆக இல்லாமல், சாதாரண A4 அளவு வழவழ பேப்பராக வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த காளிபாண்டி, இது எக்ஸ்ரே ரிப்போர்ட்டா அல்லது ஜெராக்ஸ் பேப்பரா என குழப்பமடைந்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனை பணியாளர்களிடம் முறையிட்டும் அவருக்கு எந்த முறையான பதிலும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்த காளிப்பாண்டி, 'எக்ஸ்ரே ரிப்போர்ட்டுக்கு பதிலாக ஜெராக்ஸ் பேப்பர் கொடுத்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்". இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சி.விஜயபாஸ்கர்

இந்நிலையில் தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் கையில் எலும்பு முறிவு என வந்த நோயாளிக்கு, எக்ஸ்ரே ஃபிலிம்க்கு பதிலாக ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்திருப்பது எலும்பு முறிவு வலியை விட மிக மோசமானது. தமிழகமெங்கும் பரவும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் நிரம்பி வழிகின்றனர். அதனைத் தடுக்கின்ற பணிகளில் அரசு ஈடுபட வேண்டுமென வலியுறுத்துகிறபோதே, அரசு மருத்துவமனைகளின் நிர்வாகச் சீர்கேடுகள் மிகுந்தது கவலையளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தென்காசி மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் நம்மிடம் விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர், "தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் PAX கருவி வசதி உள்ளது. இதன் மூலம் எக்ஸ்ரே எடுக்கும் நோயாளியின் டிஜிட்டல் படம் சம்பந்தப்பட்ட மருத்துவரின் பார்வைக்கு, அவர் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் நேரடியாக அப்லோட் ஆகிவிடும். நோயாளிகளின் திருப்திக்காக சம்பந்தபட்டவர்களிடம் A4 ஷீட் வழவழப்பான தாளில் எவ்வித கட்டணமின்றி ரிப்போர்ட் வழங்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு ஜெராக்ஸ் போல தோற்றமளித்திருக்கலாம். மருத்துவத்துறை விதிமுறை‌ப்படி, அரசு மருத்துவமனையில் எடுக்கப்படும் எக்ஸ்ரேவில், ஃபிலிம் ரிப்போர்ட் வேண்டுமென்றால் ரூ.50 கட்டணம் செலுத்தி நோயாளிகள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ரிப்போர்ட் உடன்..

ஆனால், அந்த 50 ரூபாய் பணமும் இல்லாமல் வறியநிலை மக்கள் பலரும் அரசு மருத்துவமனையை நாடி சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆகவே, அத்தகைய சூழலில் உள்ளவர்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவும், பொதுவாகவே பொதுமக்களுக்கு பொருளாதார ரீதியாக அரசு மருத்துவமனையில் எந்த செலவும் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையிலும் ரூ.2லட்சம் செலவில் புதிதாக PAX எக்ஸ்ரே கருவி வாங்கி பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ரிப்போர்ட்டுகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் மருத்துவருக்கு பரிமாறப்படுகிறது. இதிலும் கூட, நோயாளிகள் விருப்பப்பட்டால் விதிமுறைப்படி ரூ.50 கட்டணம் செலுத்தி ஃபிலிம் எக்ஸ்ரே பெற்றுக்கொள்ளலாம். தமிழகத்தில் பெரும்பாலான மருத்துவமனைகளிலும் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது.

தென்காசி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த சம்பந்தப்பட்ட நோயாளி, இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாமல் தவறுதலாக புரிந்துக்கொண்டு இந்த பிரச்னையை கிளப்பி விட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை உயர் அதிகாரிகளுக்கும் விளக்கம் அளித்துள்ளோம். மருத்துவமனையில், நோயாளிகளுக்கு நிறைவான சேவை வழங்குவதற்கு அனைத்து மருந்துகளும், தளவாடப்பொருள்களும், கருவிகளும் உள்ளன. எந்த குறையும் இல்லை" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Doctor Vikatan: அடிக்கடி அவதிப்படுத்தும் வாய்ப்புண்கள்... நிரந்தர தீர்வு என்ன?

Doctor Vikatan:என் மகனுக்கு 20 வயதாகிறது. அவனுக்கு 10 நாள்களுக்கொரு முறை வாயில் புண்கள் வருகின்றன. என் கணவருக்கும் இதே பிரச்னை இருக்கிறது. வாய்ப்புண் என்பது பரம்பரையாகத் தொடருமா? இதற்கு நிரந்தர தீர்வு... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஃப்ரோஸன் ஷோல்டர் (Frozen Shoulder) பாதிப்பு... இரண்டு கைகளிலும் மாறி மாறி வருமா?

Doctor Vikatan:எனக்கு ஒரு வருடத்துக்கு முன்பு இடப்பக்கத்தில் ஃப்ரோஸன் ஷோல்டர் (Frozen Shoulder) பாதிப்பு வந்தது. இப்போதுதான் அது குறைய ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் இப்போது வலது பக்க கையில் அதே வலி... மேலும் பார்க்க

Doctor Vikatan: 10 வயது சிறுவனுக்கு அடிக்கடி சளி, இருமல்... சித்த மருத்துவம் உதவுமா?

Doctor Vikatan: என்10 வயது மகனுக்கு அடிக்கடி சளி, இருமல் வருகிறது. ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் காட்டி, மாத்திரைகள் கொடுக்கிறோம். ஆனாலும் நிரந்தர தீர்வு இல்லை. சளி, இருமல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு... மேலும் பார்க்க

Doctor Vikatan: நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் (pre-diabetes) மாத்திரைகள் எடுக்க வேண்டுமா?

Doctor Vikatan:சமீபத்தில் செய்த ரத்தப் பரிசோதனையில் எனக்கு ப்ரீடயாபட்டிஸ் (pre-diabetes) என்று வந்திருக்கிறது. இதற்கு இப்போதே மருந்துகள் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்க வேண்டுமா? ப்ரீ டயாபட்டிஸுக்கு மருந்துக... மேலும் பார்க்க

Doctor Vikatan: மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?

Doctor Vikatan: கடந்த சில நாள்களாகமுதுகுவலிக்கானமருந்துகள் எடுத்து வருகிறேன். அந்த மருந்துகள் எடுக்க ஆரம்பித்ததும்எனக்கு வாய்ப்புண்கள் அதிகமாகிவிட்டன. மருந்துகளுக்கும் வாய்ப்புண்களுக்கும் தொடர்பு உண்ட... மேலும் பார்க்க