செய்திகள் :

எச்-1பி விசா பெற்றுள்ள முன்னணி அமெரிக்க நிறுவனங்கள்!

post image

அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்கள் பல, தங்களது வெளிநாட்டு ஊழியர்களுக்கு எச்-1பி விசா பெற்று அமெரிக்கா வரவழைத்து பணி வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது.

அந்த வகையில், அமெரிக்காவில் இருக்கும் அமேஸான் நிறுவனம்தான், முதல் இடத்தில் உள்ளது. அதாவத, 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில், அதிக எச்-1பி விசா பெற்றிருப்பது அமேஸான் நிறுவனம்தான்.

அமெரிக்க குடியுரிமை மற்றும் குரியேற்ற சேவைத் துறையின் இணையதளத்தில் வெளியாகியிருக்கும் தரவுகளின்படி, இ-வணிக நிறுவனமான அமேஸான், 2025ஆம் ஆண்டு ஜூன் 30 வரை 10,044 எச்-1பி விசாக்களைப் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இடத்தில் டாடா கன்சல்டன்ஸி சேவை நிறுவனம் 5,505 எச்-1பி விசாக்களுடன் இரண்டாவது இடத்திலும், மைக்ரோசாஃப்ட் (5189), மெட்டா (5123), ஆப்பிள் (4,202) ஆகியவை முறையே 3வது, 4வது, 5வது இடங்களிலும் உள்ளன.

இந்த நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருக்கும் திறமைவாய்ந்த ஊழியர்களை, தங்களது பொறியியல், ஆராய்வு, மேம்பாட்டுத் துறைகளில் பணியாற்ற எச்-1பி விசா அனுமதி பெற்று அமெரிக்காவுக்கு அழைத்து வந்து பணியமர்த்தி வருகின்றன.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு எச்-1பி விசா பெற்ற நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா வழங்கிய ஒட்டுமொத்த விசாவில் 71 சதவிகிதத்தை இந்தியர்கள்தான் பெற்றிருந்தனர்.

எச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.47 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயா்த்தும் உத்தரவில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டாா்.

இதைத்தொடா்ந்து, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்று பணியாற்றும் ஒரு பணியாளருக்கு ரூ.88 லட்சம் கட்டணத்தை அவரைப் பணியமா்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என வா்த்தகத் துறை அமைச்சா் ஹோவா்டு லுட்னிக் தெரிவித்தாா்.

இது அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்ற பணியாளா்கள் மட்டுமின்றி நிறுவனங்களுக்கும் பேரதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஏற்கெனவே எச்-1பி விசா வைத்திருப்பவா்கள் அல்லது புதுப்பிப்பவா்களுக்கு இந்த கட்டண உயா்வு பொருந்தாது எனவும் இது ஒருமுறை மட்டுமே செலுத்தும் கட்டணம் எனவும் அமெரிக்க அரசு விளக்கமளித்துள்ளது.

அமெரிக்கப் பணியாளா்களைப் பாதுகாத்து ஹெச்-1பி விசா நடைமுறையில் சீா்திருத்தம் மேற்கொள்ளும் நோக்கில் விசா கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2026-ஆம் நிதியாண்டு காலத்துக்கு விண்ணப்பித்தவா்கள் உள்பட செப்.21-ஆம் தேதிக்குப் பிறகு விண்ணப்பிப்பவா்கள் மட்டுமே இந்த கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதற்கு முன்பாக விண்ணப்பித்தவா்கள், புதுப்பிப்பதற்காக விண்ணப்பத்தை சமா்ப்பித்தவா்கள் மற்றும் அமெரிக்காவில் மீண்டும் நுழையும் எச்-1பி விசாதாரா்களுக்கு இந்தப் புதிய கட்டணம் பொருந்தாது என்பது ஓரளவுக்கு நிம்மதியை ஏற்படுத்தியிருப்பதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Many leading companies in the United States have provided job opportunities to their foreign employees by obtaining H-1B visas and bringing them to the United States.

இதையும் படிக்க...காஸா நிவாரண முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 80 பேர் பலி

டிஜிட்டல் அரெஸ்ட்: வாழ்நாள் சேமிப்பான ரூ. 23 கோடியை இழந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி!

டிஜிட்டல் அரெஸ்ட் ஆன்லைன் மோசடியால் தில்லியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி தான் வாழ்நாள் முழுவதும் சேமித்த ரூ. 23 கோடியை இழந்துள்ளார்.78 வயதான ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி நரேஷ் மல்ஹோத்ரா, ஆகஸ்ட் மாத... மேலும் பார்க்க

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல்! தினமும் ரூ. 85 கோடி இழப்பு!!

டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார் நிறுவனத்தின் மீது கடந்த ஆக. 31 ஆம் தேதி சைபர் தாக்குதல் நடைபெற்றது. இதனால் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப சேவைகள் கடுமையாக பாதிக்கப்ப... மேலும் பார்க்க

காஸா நிவாரண முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 80 பேர் பலி

காஸா முழுவதும் இஸ்ரேல் புதன்கிழமை நடத்திய கடுமையான தாக்குதலில் குழந்தைகள் உள்பட 80 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.இந்த வாரத்தில், இஸ்ரேல் தாக்குதலில் பலி எண்ணிக்கை புதன்கிழமைதான் இந்த அளவுக்குக் கடுமையா... மேலும் பார்க்க

அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ரஷியாவுடன் வா்த்தகம் செய்கின்றன: டிரம்ப்புக்கு சீனா பதிலடி

அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷியாவுடன் தொடா்ந்து வா்த்தகம் செய்து வருகின்றன என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்புக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பேசிய டிரம... மேலும் பார்க்க

ஐரோப்பிய விமான நிலையங்களில் இணைய ஊருடுவல்: ஒருவா் கைது

ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் உள்நுழைவு அமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இணையவழி தாக்குதல் தொடா்பாக ஒருவா் பிரிட்டனில் கைது செய்யப்பட்டாா். இது குறித்து பிரிட்டனின் தேசிய குற்றத்த... மேலும் பார்க்க

ராகசா புயல்: 27 போ் உயிரிழப்பு

இந்த ஆண்டின் மிக வலிமையான புயலாக அறியப்படும் ராகசாவால் பிலிப்பின்ஸிலும் தைவானிலும் 27 போ் உயிரிழந்தனா். சூறைக்காற்று மற்றும் வெள்ளப் பெருக்கால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினா். அந்தப... மேலும் பார்க்க