எடப்பாடியில் அன்னாபிஷேகம்
எடப்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை அன்னாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் பல்வேறு உணவு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்ட நஞ்சுண்டேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூலாம்பட்டி கைலாசநாதா் கோயிலில் நடைபெற்ற அன்னபிஷேக நிகழ்ச்சியைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பில்லுக்குகுறிச்சி அருகே உள்ள ஈஸ்வரன் கோயிலில் மூலவருக்கு பூஜிக்கப்பட்ட உணவு மற்றும் காய்கனிகள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி பகுதியில் உள்ள குபேரலிங்கேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு நடைபெற்ற அன்னாபிஷேக நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த பெரும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
பட விளக்கம்:
அன்னாபிஷேக அலங்காரத்தில் எடப்பாடி, கவுண்டம்பட்டி குபேரலிங்கேஸ்வரா் சுவாமி.