யூ டியூப் சேனல்களுக்கும் உரிமம் கட்டாயம்: கர்நாடக அரசு பரிசீலனை
``எடப்பாடி முகத்தை மூடிக்கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?'' - டிடிவி தினகரன் கேள்வி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று(செப்.16)இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
அதன்பிறகு காரில் சென்ற அவர் ஊடகங்களிடம் முகத்தை மறைக்கும் வகையில் கைக்குட்டையை வைத்து மறைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் இன்று (செப்.17) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எடப்பாடியை விமர்சித்துப் பேசியிருக்கிறார். "உள்துறை அமைச்சரைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது முகத்தை மூடிக்கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
இதுவரை அரசியலில் நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எந்த ஒரு கட்சித் தலைவராவது கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்துவிட்டு வரும்போது இப்படி முகத்தை மூடிக்கொண்டு வருவதைப் பார்த்திருக்கிறீர்களா?

அருகில் அமர்ந்திருந்தது அவரது அன்பு மகன் என்று ஊடகங்களைப் பார்க்கும்போதுதான் தெரிந்தது. முகத்தை மூடிக்கொண்டு வந்ததற்கான காரணத்தை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும். இனி இவரை முகமூடி பழனிசாமி என்றுதான் அழைக்க வேண்டும் " என்று விமர்சித்துப் பேசியிருக்கிறார்.