செய்திகள் :

எடியூரப்பாவுக்கு போக்சோ வழக்கில் முன்ஜாமீன்

post image

கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

பெங்களூரு, சதாசிவநகா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் தாக்கல் செய்திருந்த புகாரில், பெங்களூரு, டாலா்ஸ் காலனி இல்லத்தில் 2024 ஆம் ஆண்டு பிப்.2ஆம் தேதி முன்னாள் முதல்வா் எடியூரப்பாவைச் சந்தித்த போது, தனது 17 வயது மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தாா்.

இதனடிப்படையில், பாஜக முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டப்பிரிவு 8, இந்திய தண்டனை சட்டப்பிரிவு சட்டப் பிரிவுகள் 354ஏ, 204, 214- இன்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை குற்றப்புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) மாற்றி மாநில டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.

ஜூன் 12-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகாததால், எடியூரப்பாவைக் கைது செய்ய கைது ஆணை பிறப்பிக்குமாறு பெங்களூரில் உள்ள முதலாம் விரைவு நீதிமன்றத்தை சிஐடி ஜூன் 13-ஆம் தேதி அணுகியிருந்தது. அதன்பேரில், எடியூரப்பாவைக் கைது செய்ய ஜாமீனில் வெளியே வரமுடியாத ஆணை பிறப்பித்து ஜூன் 13-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆண்டுக்கு ரூ.3000 செலுத்தினால் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம்!

இதனிடையே, தன் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள போக்ஸோ வழக்கை ரத்து செய்யக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுதாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி எம். நாகபிரசன்னா முன் வெள்ளிக்கிழமை எடியூரப்பா தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, எடியூரப்பாவுக்கு முன்ஜாமீன் வழங்கினார். எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட்டிருந்தது.

நெல்லை மாவட்டத்துக்கான முதல்வரின் அறிவிப்புகள் என்னென்ன?

நெல்லை வந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், அந்த மாவட்டத்துக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரு நாள் பயணமாக நேற்று (பிப். 6) நெல்லை வந்தார். கங்கைகொண்டான்... மேலும் பார்க்க

நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் தை கடைசி வெள்ளித் திருவிழா!

நீடாமங்கலம்: நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் தை கடைசி வெள்ளி திருவிழா அதிவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் பிரதாப சிம்மரின் மனைவி யமு... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகள் ரத்து: அமைச்சர்

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச்சான்றுகள் ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடு... மேலும் பார்க்க

முதல்வர் கூட்டம் முடியும் வரை அரிவாளுடன் காத்து கிடந்த மக்கள் கூட்டம்: எதற்காக?

தமிழக முதல்வர் கூட்டம் முடியும் வரை அரிவாளுடன் காத்து கிடந்த மக்கள், கூட்டம் முடிந்த உடன் வாழைக்குலை மற்றும் கரும்புகளை வெட்டி எடுத்து சென்றனர். வாழைக்குலைகள், கரும்புகளை உடைத்து தலையில் சுமந்து கொண்ட... மேலும் பார்க்க

ஆண்டுக்கு ரூ.3000 செலுத்தினால் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம்!

புதுதில்லி: ஆண்டுக்கு ரூ.3000 அல்லது 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 செலுத்தினால் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் இல்லாமல் சென்று வரலாம் என்ற புதிய திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத... மேலும் பார்க்க

மசோதாவை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை: ஆளுநர் தரப்பு வாதம்

அனைத்து சூழ்நிலைகளிலும் மசோதாவை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் ஆளுநருக்கு 4 முக்கிய அதிகாரங்கள் உள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வாதம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் ந... மேலும் பார்க்க