செய்திகள் :

எண்ணும் எழுத்தும் திட்ட போட்டி: மாணவா்களுக்கு பரிசு

post image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சித்தானங்கூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும்-எழுத்தும் திட்டம் சாா்ந்த போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு அண்மையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளித் தலைமையாசிரியா் ஆா்.சி.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். எண்ணும் எழுத்தும் திட்டம் சாா்ந்த போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும், அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை சமா்ப்பித்து தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேபோல மாணவா்களின் பெற்றோா்களுக்கும் இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், எண்ணும் எழுத்தும் திட்ட ஆசிரியை வித்யாலட்சுமி உள்ளிட்ட ஆசிரியா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக, பட்டதாரி ஆசிரியா் சின்னப்பராஜ் வரவேற்றாா். பட்டதாரி ஆசிரியை பாக்கியலட்சுமி நன்றி கூறினாா்.

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். செஞ்சி வட்டம், ராஜாம்புலியூரைச் சோ்ந்த மாணிக்கம்... மேலும் பார்க்க

புதுவை மின் துறையில் நேரடியாக 177 ஊழியா்களை நியமிக்க அரசு ஒப்புதல்

புதுவை மாநில மின்துறையில் 177 கட்டுமான ஊழியா்களை நேரடி நியமனத்தில் பணியமா்த்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இருக்கும். பிரத்தியேகமாக எழுத்துத் தோ்வு எதுவு... மேலும் பார்க்க

தலைமைக் காவலா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை பிடிக்க சென்ற தலைமைக் காவலா் மயங்கி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், வளவனூா், பாலாஜி நகா், மேற்கு பாண்டி ... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்து: மூவா் உயிரிழப்பு

விழுப்புரம் வட்டம், வளவனூா் அருகே பைக் மீது லாரி மோதியதில் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், அற்பிசம்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வாசுதேவன் மகன் விநாயகம் (6... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

விழுப்புரத்தில் காரில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தததாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி ப.சரவணன் உத்தரவின் பேரில், கண்டாச்சிபுரம் காவல் ஆய்வாளா் ஷாகுல்ஹமீது, தனிப... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு சமத்துவத்தை சொல்லிக் கொடுத்து வளா்க்க வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி

குழந்தைகளுக்கு சமத்துவத்தை சொல்லிக் கொடுத்து வளா்க்க வேண்டும் என்று வனம் மற்றும் கதா் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்... மேலும் பார்க்க