கற்திட்டை அமைப்புடன் கூடிய 400 ஆண்டுகள் சதிக்கல் கண்டெடுப்பு
`எந்த மதமும் மாசுபாட்டை ஏற்படுத்தும் விதமாக எதையும் ஊக்குவிக்கவில்லை' - உச்ச நீதிமன்றம்
காற்று மாசுபாடுகளால் பெரிதும் பாதிக்கப்படும் பகுதிகளில் டெல்லி எப்போதும் முன்னணியில் இருக்கும். அதனால், கடந்த மாதம் 14-ம் தேதி டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்து டெல்லி ஆம் ஆத்மி அரசு உத்தரவிட்டிருந்தது. அதைமீறி வெடி வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தது. இதை எதித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அதன் பிறகு நீதிபதிகள், ``அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின்படி, மாசு இல்லாத சூழலில் வாழ்வதற்கான உரிமை அடிப்படை உரிமையாகும்.
எந்த மதமும் மாசுபாட்டை ஏற்படுத்தும் விதமாகவோ, மக்களின் ஆரோக்கியத்துடன் சமரசம் செய்யும் எந்த செயலையும் ஊக்குவிப்பதில்லை என்று நாங்கள் கருதுகிறோம். அக்டோபர் 14-ம் தேதி டெல்லி அரசு பிறப்பித்த பட்டாசு தடையை அமல்படுத்த சிறப்புப் பிரிவை உருவாக்க வேண்டும். மேலும், இந்த தடை குறித்து அனைத்து பட்டாசு உற்பத்தியாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதா என்பது குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் நவம்பர் 25-ம் தேதிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
ஆன்லைன் பட்டாசு விற்பனையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் அளிக்க வேண்டும். பட்டாசு தடையை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக சிறப்புப் பிரிவை அமைக்குமாறு டெல்லி போலீஸ் கமிஷனருக்கு நாங்கள் உத்தரவிடுகிறோம். தடையை அமல்படுத்துவதற்கு அவர்கள் எடுத்த நடவடிக்கைகளைப் பதிவு செய்து தனிப்பட்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடுகிறோம்," எனக் குறிப்பிட்டிருக்கிறது.