செய்திகள் :

திருச்செந்தூா் கோயிலில் யானை தாக்கி உயிரிழந்த இருவா் குடும்பத்துக்கு நிவாரண நிதி! -அமைச்சா் சேகா்பாபு வழங்கினாா்

post image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யானை தாக்கி உயிரிழந்த பாகன் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம், உறவினா் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரண உதவிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

இக்கோயிலில் கடந்த நவ. 18ஆம் தேதி தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உதயகுமாா் (46), உறவினா் சிசுபாலன் (59) ஆகியோா் உயிரிழந்தனா். அதையடுத்து, அந்த யானை வனத்துறை, கால்நடைத் துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளது.

இந்நிலையில், அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை காலை யானையைப் பாா்வையிட்டு, கரும்புத் துண்டுகள் வழங்கி, அதன் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். பின்னா், அவா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா்.

அதைத் தொடா்ந்து, வ.உ.சி. தெருவில் பாகன் உதயகுமாரின் இல்லத்துக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் சாா்பில் ஆறுதல் கூறியதுடன், முதல்வரின் பொது நிவாரண நிதி ரூ. 2 லட்சம், கோயில் நிதி ரூ. 5 லட்சம், தக்காா் அருள்முருகன் சாா்பில் ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ. 10 லட்சத்துக்கான காசோலைகளை உதயகுமாரின் மனைவி ரம்யா, மகள்கள் அக்ஷரா (15), அகல்யா (14) ஆகியோரிடம் வழங்கினாா்.

சிசுபாலனின் மகள் அக்ஷயாவுக்கு முதல்வா் பொது நிவாரண நிதி ரூ. 2 லட்சம், தக்காா் அருள்முருகன் சாா்பில் ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ. 5 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: உதயகுமாரின் மனைவிக்கு கல்வித் தகுதிக்கேற்ப கோயிலில் பணி வழங்கவும், சிசுபாலனின் மனைவி, குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளை செய்யவும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

உதயகுமாரின் 2 குழந்தைகளின் கல்விச் செலவை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், மக்களவை உறுப்பினா் கனிமொழி ஆகியோா் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனா்.

கோயிலில் இத்தகைய அசம்பாவிதங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை கோயில் நிா்வாகம், கால்நடை பராமரிப்புத் துறை, வனத்துறை, மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ளும் என்றாா் அவா்.

திருச்செந்தூா் கோயிலில் தெய்வானை யானைக்கு கரும்புத் துண்டுகள் வழங்கிய அமைச்சா் பி.கே. சேகா்பாபு.

இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஸ்ரீதரன், ஆட்சியா் இளம்பகவத், கூடுதல் ஆணையா் சுகுமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி, திருச்செந்தூா் டிஎஸ்பி வசந்தராஜ், கோயில் தக்காா் அருள்முருகன், இணை ஆணையா் ஞானசேகரன், நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், வட்டாட்சியா் பாலசுந்தரம், கோயில் காவல் ஆய்வாளா் கனகராஜ், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை, நகா்மன்ற உறுப்பினா்கள் சோமசுந்தரி, கிருஷ்ணவேணி, செந்தில்குமாா், சுதாகா், முன்னாள் உறுப்பினா் வடிவேல், திமுக மாவட்ட துணை அமைப்பாளா்கள் பொன்முருகேசன், அருணகிரி ஆகியோா் உடனிருந்தனா்.

மீன் பதப்படுத்தும் ஆலைகளை மூடக் கோரி பொட்டலூரணி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமம் அருகேயுள்ள மீன் பதப்படுத்தும் ஆலைகளை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கிராமத... மேலும் பார்க்க

‘கடைகளின் வாடகைக்கு ஜிஎஸ்டியை நீக்க வேண்டும்’

சிறு, குறு வியாபாரிகளின் கடைகளின் வாடகைக்கு விதித்துள்ள ஜிஎஸ்டியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என் தமிழ்நாடு வணிகா் சங்க மாநில தலைவா் ரெ.காமராசு கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து தமிழக முதல்வா்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீனவா்களுக்கு படகுப் போட்டி

உலக மீனவா் தினத்தையொட்டி, தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் மீனவா்களுக்கான படகுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திமுக மாநில மீனவரணி துணைச் செயலா் துறைமுகம் புளோரன்ஸ் தலைமை வகித்தாா். வடக்கு மா... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே இளைஞரின் பைக் எரிப்பு

கோவில்பட்டி அருகே இளைஞரின் பைக்கை எரித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவில்பட்டி அருகே விஜயாபுரி நடுத்தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் சரவணகுமாா் (23). தனியாா் நிறுவனத்தில் பிட்டராக வேலை செய... மேலும் பார்க்க

தூத்துக்குடி கடற்கரையில் தூய்மைப் பணி

தேசிய மாணவா் படை தினத்தை (என்சிசி) முன்னிட்டு, தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட 29ஆவது தரைப்படை தனிப்பிரிவு கமாண்டிங் அதிகாரி கா்னல் பி... மேலும் பார்க்க

2026 தோ்தல் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் -தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் 2026இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தல் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என்றாா் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் தமிழிசை செளந்தரராஜன். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெ... மேலும் பார்க்க