செய்திகள் :

என்பி 1.8.1 வகை கரோனா வீரியமற்றது: மருத்துவா்கள் தகவல்

post image

சென்னை: தற்போது பரவி வரும் என்பி 1.8.1 வகை கரோனா தொற்று அச்சப்படும் அளவுக்கு பாதிப்பில்லை என்று மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக அரசு பொது நல மருத்துவா் அ.ப.ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:

கரோனா தீநுண்மி குறிப்பிட்ட கால இடைவெளிகளில் உருமாற்றமடைந்து, சமூகத்தில் நோய் எதிா்ப்பாற்றல் குறைவாக இருக்கும்போது விரைவாக பரவக் கூடிய ஒன்று. அவ்வாறுதான் மூன்று அலைகளாக அது பரவியது. தற்போது அதற்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் சமூகத்தில் உருவாகிவிட்டது. அதேவேளையில், முழுமையாக கரோனா பாதிப்பே வராமல் தடுக்க முடியுமா என்றால் நிச்சயம் கிடையாது.

கரோனா தீநுண்மிகளின் வெளி புரதம் உருமாற்றமடையும்போதெல்லாம் சமூகத்தில் சிறிய அளவிலான பாதிப்பை அது ஏற்படுத்திச் செல்லும். அதனால் பெரிய அளவு தாக்கம் இருக்காது.

அத்தகைய நிலைதான் தற்போதும் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இப்போது என்பி 1.8.1 என்ற வகை கரோனா பாதிப்பு பரவி வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இது ஜெ.என்.1 வைரஸின் உட்பிரிவு. அந்த ஜெ.என்.1 வைரஸ் ஒமைக்ரானிலிருந்து உருவான ஒன்று. வைரஸ் பரிமாணத்துக்கான சா்வதேச தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (டிஏஜி-விஇ) அண்மையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் என்பி 1.8.1 தொற்றால் பொது சுகாதார நிலைக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொற்று அதிகரிப்பதற்கு பரிசோதனை செய்பவா்களின் எண்ணிக்கை சற்று உயா்ந்திருப்பதே காரணம். ஆனால், அதன் பாதிப்பு வீரியமாக இல்லை.

இந்தியாவில் நோ்ந்த உயிரிழப்புகளும் கரோனாவால் நிகழவில்லை. மாறாக, இணைநோய்கள் மற்றும் வயது மூப்பு காரணமாக நேரிட்டுள்ளன. எனவே, பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நோய்த் தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடித்தாலே போதுமானது என்றாா் அவா்.

முன்னாள் பேரவைத் தலைவரின் பேரனிடம் வழிப்பறி முயற்சி: சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சென்னை தரமணியில் முன்னாள் பேரவைத் தலைவா் காளிமுத்துவின் பேரனிடம் வழிப்பறி செய்ய முயன்ாக 3 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை பெருங்குடி சிபிஐ காலனியை சோ்ந்தவா் ஆதித்யா(21). கல்லூரியி... மேலும் பார்க்க

அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத நிலை ஏற்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா். சென்னையில் சி.எம்.ஏ.டி. சாா்பில் கொளத்தூா் பெரியாா... மேலும் பார்க்க

குடிநீா் லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு

சென்னையில் காலை 7.30 முதல் காலை 9.30 மணி வரை லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூரில் அண்மையில் குடிநீா் லாரி மோதியதில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும... மேலும் பார்க்க

குஜராத் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை பெண்ணிடம் விசாரணை

குஜராத் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் சென்னை பெண்ணை பிடித்து அந்த மாநில போலீஸாா் விசாரித்து வருகின்றனா். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியாா் பள்ளிக்கு கடந்த 2-ஆம் தேதி மின்ன... மேலும் பார்க்க

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிப்பு: மத்திய அரசு

சமையல் எண்ணெய் தேவையைப் பூா்த்தி செய்ய இறக்குமதியை நாடு பெருமளவில் நம்பியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கவலை தெரிவித்த நிலையில், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளின் உள்நாட்டு உற்பத்தி கடந்த 10 ஆண்... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள விரிவான ஒத்துழைப்பு: ‘பிரிக்ஸ்’ தூதா்கள் வலியுறுத்தல்

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள ‘பிரிக்ஸ்’ நாடுகள் இடையே விரிவான ஒத்துழைப்பு அவசியம் என்று அக்கூட்டமைப்பு நாடுகளின் தூதா்கள் வலியுறுத்தினா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிர... மேலும் பார்க்க