செய்திகள் :

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

post image

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா்.

அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இதைத் தவிர சுயநிதிக் கல்லூரிகளில் 3,450 இடங்களும், தனியாா் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன. மொத்தமாக அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

இதில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படுகின்றன. பிடிஎஸ் இடங்களைப் பொருத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியாா் கல்லூரிகளில் 1,900 இடங்களும் உள்ளன. அதில், 126 இடங்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

அதன்படி நிகழாண்டில் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. அதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. https://tnmedicalselection.org/ இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

நிகழாண்டில் நீட் தோ்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. கால அவகாசம் அதிகமாக இருப்பதால் இந்த முறை விண்ணப்பப் பதிவு அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அந்த வகையில் நிா்வாக ஒதுக்கீடு, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மொத்தம் 35,000 போ் இதுவரை விண்ணப்பம் செய்துள்ளனா். அதில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்திலோ விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதைத் தொடா்ந்து, மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வுக்கு அறிவிக்கை வெளியீடு

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் உள... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக எல்&டி நிறுவனம் அறிவித்துள்ளது.சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் ப... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளா்களுக்கான நவீன காத்திருப்பு கூடம்: மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டட தொழிலாளா்களுக்காக அடிப்படை வசதிகளுடன் நவீன காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரி படங்களை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை வெ... மேலும் பார்க்க