செய்திகள் :

`என் கடன் பலகாரம் செய்து கிடப்பதே’ என... தீபாவளியைக் கழிக்கும் பெண்களே... கேளுங்கள்!

post image

ஒளி, உலகெங்கும் பரவுவதைப்போல, இந்தியர்களின் உள்ளமெங்கும் மகிழ்ச்சி பரவும் பண்டிகை... தீபாவளி!

புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் என தீபாவளிக்கே உரித்தான கொண்டாட்டங்கள் அனைத்தும் சேரும் மையச் சரடு... உறவுகளின் ஒன்றுகூடல். ஆம், பொருள் தேடலில் ஆளுக்கொரு பக்கமாகப் பாய்ந்துவிட்ட நம்மில் பலரையும்... சேர்க்கும் அச்சு, இதுபோன்ற திருநாள்கள்தான்.

தினசரி வேலைகளில் இருந்து நம்மை விடுவித்துக்கொண்டு, அலுவல் அழுத்தங்களை ஆஃப் செய்துவிட்டு, பர்சனல் பிரச்னைகளைத் தள்ளிவைத்துவிட்டு, எதிர்காலக் கவலைகளை தற்காலிகமாக மறந்து... சொந்த ஊர் நோக்கி, பூர்வீக வீடு நோக்கிச் செல்லும் மனங்களுக்கு, காத்திருக்கும் நிம்மதி தோய்ந்த ஓர் இளைப்பாறல்.

வீட்டுப் பெரியவர்கள், `நல்ல நாளும் அதுவுமா...’ என்று சொல்லி, அன்றைய தினம் நம் மனதில் துளி எதிர்மறை எண்ணமும் எழாமல் தடைபோட்டு, உற்சாகத்தை ஊட்டிக்கொண்டே இருப்பார்கள். அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குகையில், வரும் காலத்துக்கான நம்பிக்கை, நமக்குள் இறங்கும் தருணம்... அற்புத கணம். மூத்தோர் இல்லாத தனிக்குடும்பங்களிலும், தம்பதிக்கு இடையே, பெற்றோர் - குழந்தைகளுக்கு இடையே நெருக்கத்தை நிரப்பும் தினம் இது.

கால ஓட்டத்தில், வாழ்க்கைச் சூழலில் சில உறவுகள், நட்புகளுடன் ஏற்பட்ட இடைவெளி, பிணக்கை நீக்கும் வாய்ப்பையும், இனிப்புத் தட்டோடு வைத்தே நீட்டுகின்றன இதுபோன்ற பண்டிகைகள். `தீபாவளி வாழ்த்துகள்...’ என்று `அலைபேசி’னாலோ; ‘வாட்ஸ்அப்’பினாலோ; ‘குறுஞ்செய்தி’னாலோ போதும்... பண்டிகை தித்திப்பில் இருக்கும் மனங்கள் இறுக்கம் விலகி, ‘ஒருவழியா இன்னிக்கு, நான் இருக்கிறது உனக்கு ஞாபகம் வந்துடுச்சா...’ என்றபடி சந்தோஷ சமரசம் ஆகும். பல மாதங்கள், ஆண்டுகளுக்கு முன் விட்ட அதே இடத்திலிருந்து அந்த உறவு தொடரும் மாயமெல்லாம்கூட நடக்கும்.

டிஜிட்டல் யுகத்தில் தீபாவளி 2025 போட்டோக்கள், போஸ்ட்கள், ரீல்கள், ஸ்டோரிகள், ஸ்டேட்டஸ் என அதகளப்படுத்தும் இளையப் பட்டாளத்துடன் நாமும் அப்டேட் ஆகி, சேர்ந்தே கொண்டாடுவோம்; நினைவுகளைச் சேகரிப்போம் மன கேலரியில். சந்தோஷமான, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் நினைவுகளை எல்லாம் கடத்துவோம்... அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும்!

தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டங்களுடன் பாதுகாப்பையும் உறுதி செய்வது மிக முக்கியம் தோழிகளே. பயணம், பட்டாசு, எண்ணெய்ச் சட்டி என... இவற்றில் எல்லாம் இருக்கட்டும் இரட்டிப்பு கவனம். அவசரம், பரபரப்பு, பதற்றமின்றி செய்வோம், காரியங்களை.

மிக முக்கியமாக பெண்களாகிய நாம், ‘என் கடன் பலகாரம் செய்து கிடப்பதே’ என்று அடுப்படியிலேயே பண்டிகை பொழுதைக் கரைக்காமல் இருப்போம். வேலைகளைச் சுருக்கிக்கொண்டு, உறவுகளுடன் இருக்கும் சந்தோஷத்தைப் பெருக்கிக் கொள்வோம் தோழிகளே!

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

நன்றியுணர்வின் சக்தி : எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது? | மறந்துபோன பண்புகள் - 5

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரி டூ டிஜிட்டல் படைப்பாளர்! - இளைஞரின் உத்வேக கதை #நானும்விகடனும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தெருநாய்கள் பிரச்னை உலகளாவியது- சரியான தீர்வு எது? #Straydogissue

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பண பரிவர்த்தனை : தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால், திரும்பப் பெறுவது எப்படி?

இப்போதெல்லாம் ஆன் லைன் பேமென்ட் ஆப்களில் இருந்து பணம் அனுப்புவது அதிக மாகிவிட்டது. இப்படி பணம் அனுப்பும்போது சில நேரங்களில், தவறாக வேறொரு நபருக்கு பணம் அனுப்பி விடுவோம்; ஒரே நபருக்கே இரு முறை அனுப்பிவ... மேலும் பார்க்க

RMKV: 101 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆரெம்கேவி; 15 புதிய பட்டுப்புடவைகள் அறிமுகம்

1924 ஆம் ஆண்டு, முதல் கடையை திருநெல்வேலியில் துவங்கியதில் ஆரெம்கேவி இருந்து, இன்று வரை நூறாண்டு காலமாக, வாடிக்கையாளர்களின் அன்பாலும், வியாபாரிகளின், நம்பிக்கையாலும், எங்களது நெசவாளர்கள் மற்றும் பணியாள... மேலும் பார்க்க

சூப்பர் சென்னை 'Icon of the month' விருது - சென்னையின் மதிப்பை உயர்த்திய Dr. எஸ். சந்திரகுமார்

இந்த அங்கீகாரம், மருத்துவத் துறையில் டாக்டர் சந்திரகுமார் செய்த முன்னோடி பங்களிப்பையும், 'இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்' என சென்னையின் மதிப்பை உயர்த்திய அவரது முக்கிய பங்கையும் வெளிப்படுத்துகிறது. ... மேலும் பார்க்க