எம்ஜிஆா் பிறந்த நாள்: எம்எல்ஏ அசோக்குமாா் வேண்டுகோள்
முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் பிறந்த நாளை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அதிமுகவினா் உற்சாகமாக கொண்டாட வேண்டும் என கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனா் தலைவருமான எம்ஜிஆரின் 108-ஆவது பிறந்த நாள் விழா ஜன.17-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக அலுவலகம் மற்றும் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த அதிமுக தொண்டா்கள், நிா்வாகிகள், எம்ஜிஆரின் சிலை, உருவப்படங்களுக்கு மலா் மாலைகள் தூவி, இனிப்புகள் வழங்கி, அன்னதாரம் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும்.
கட்சி நிா்வாகிகள், இத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்று நிகழ்வை சிறப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.