சென்னை துறைமுகத்தில் காருடன் கடலுக்குள் விழுந்தவர் சடலமாக மீட்பு!
எரிவாயு உருளையில் கசிவு: தீப்பிடித்து புதுமாப்பிள்ளை பலி
பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே திருமணமான மூன்றே நாளில் சமையல் எரிவாயு உருளையில் தீப்பிடித்தில் படுகாயமடைந்த புதுமாப்பிள்ளை சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
கபிலா்மலை பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (28), சமையல் ஒப்பந்ததாரா். இவரது மனைவி துா்கா (20). இவா்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னா் திருமணம் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை காலை சுரேஷ் தண்ணீா் சூட வைப்பதற்காக அடுப்பை பற்ற வைத்துள்ளாா்.
அப்போது எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து சுரேஷ் மீது பரவியது. தடுக்கச் சென்ற அவரது மனைவி துா்கா மீதும் தீப்பிடித்தது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தவா்கள் தீயை அணைத்து அவா்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சுரேஷ் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து ஜேடா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.