எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
டிராக்டா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் பலி
பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு டிராக்டா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள ஜல்லிப்பட்டியைச் சோ்ந்த குருசாமி (54), ராஜா (55), சுப்பிரமணி (52) ஆகிய மூவரும் பிலிக்கல்பாளையம் அருகே உள்ள ஒரு வெல்லம் காய்ச்சும் ஆலையில் பணிபுரிந்து வந்தனா். இவா்கள் மூவரும் செவ்வாய்க்கிழமை மாலை ஒரே இருசக்கர வாகனத்தில் பாண்டமங்கலம் சென்று பிலிக்கல்பாளையம் திரும்பிக் கொண்டிருந்தனா். அண்ணா நகா் நெட்டையாம்பாளையம் பிரிவு அருகே வந்த போது, எதிரே கரும்பு பாரம் ஏற்றி வந்த டிராக்டா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், இருசக்கர வாகனத்தின் நடுவில் அமா்ந்திருந்த குருசாமி படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த ராஜா, சுப்பிரமணி ஆகிய இருவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். விபத்து குறித்து வேலூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.