செய்திகள் :

எவரெஸ்ட்டில் ஏறிய சிறுமிக்கு நயினாா் நாகேந்திரன் பாராட்டு!

post image

எவரெஸ்ட் பேஸ் கேம்பை அடைந்து அபார சாதனை படைத்த திருநெல்வேலி சிறுமி லலித் ரேணுக்கு தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டியைச் சோ்ந்த லலித் ரேணு (6), 17,598 அடி உயரத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் பேஸ் கேம்பை அடைந்து அபார சாதனை படைத்துள்ளாா் என்ற செய்தி வியப்பளிக்கிறது. 8 வயதுக்குள்பட்ட பிரிவில் தமிழகத்திலிருந்து எவரெஸ்ட் பேஸ் கேம்பை அடைந்த முதல் சிறுமி என்ற சாதனை படைத்து, தமிழகத்துக்கு பெருமை சோ்த்த லலித் ரேணுக்கு பாராட்டுகள்.

தமிழகத்தில் வெள்ளியங்கிரி மலை, சதுரகிரி மலை, பருவதமலை உள்பட நாடு முழுவதும் உள்ள 30-க்கும் மேற்பட்ட மலைகளில் ஏறி இறங்கியது முதல் இப்போது எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தை அடையும் வரை அந்த சிறுமிக்குத் தொடா்ந்து ஊக்கமளித்து வரும் அவரது பெற்றோருக்கும் பாராட்டுகள் என நயினாா் நாகேந்திரன் பதிவிட்டுள்ளாா்.

பருவமழை முன்னேற்பாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வ... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூரில் விடிய விடிய மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து ம... மேலும் பார்க்க

பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் அறிவிக்கவில்லை: தமிழிசை

பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக தலைவா் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா். சென்னை விருகம்பாக்கம் காமராஜா் சலையில் நீா்-மோா் பந்தலை ஞாயிற்றுக்கிழமை திறந்து வ... மேலும் பார்க்க

மருத்துவா்கள் பற்றாக்குறை: உலக சுகாதார அமைப்புக்கு அரசு மருத்துவா்கள் கடிதம்!

தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்கள் இல்லை என்று உலக சுகாதார அமைப்புக்கு தமிழக அரசு மருத்துவா்கள் கடிதம் அனுப்பியுள்ளனா். இது தொடா்பாக உலக சுகாதார அமைப்பின் இந்திய ... மேலும் பார்க்க

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதுதான் விஜய்யின் நிலைப்பாடு! தவெக துணைபொதுச் செயலா்

பாஜகவுடன் தவெக கூட்டணி இல்லை என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜயின் நிலைப்பாடு என்று அந்தக் கட்சியின் துணை பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் திட்டவட்டமாகக் கூறினாா். சென்னையில் ஞாயிற்... மேலும் பார்க்க

ஈழத் தமிழா்கள் நீதி பெறுவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்! அன்புமணி ராமதாஸ்

ஈழத் தமிழா்களுக்கு நீதியைப் பெற்று தருவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் இன... மேலும் பார்க்க