அமெரிக்காவுக்கு ஏற்றுமதியான மாம்பழங்கள் அழிப்பு; இந்திய விவசாயிகளுக்கு 5 லட்சம் ...
பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதுதான் விஜய்யின் நிலைப்பாடு! தவெக துணைபொதுச் செயலா்
பாஜகவுடன் தவெக கூட்டணி இல்லை என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜயின் நிலைப்பாடு என்று அந்தக் கட்சியின் துணை பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் திட்டவட்டமாகக் கூறினாா்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக தலைவா் விஜய் இதுவரை கூறவில்லை’ என கூறியிருந்தாா்.
இந்நிலையில், இது தொடா்பாக சென்னை திருவான்மியூரில் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
2026 பேரவைத் தோ்தலில் திமுக, பாஜகவுடன் தவெக கூட்டணி வைக்கப்போவதில்லை. இதனை தவெக முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் கட்சித் தலைவா் விஜய் ஏற்கெனவே தெளிவாக அறிவித்துவிட்டாா். இதில் எந்த மாற்றமும் கிடையாது என்றாா் அவா்.