செய்திகள் :

ஏபி பிஎம்-ஜாய் ஒரு காப்பீடுத் திட்டமல்ல மருத்துவத்திற்கான உறுதித்திட்டம்: ஜெபி நட்டா

post image

பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தை (ஏபி பிஎம்-ஜாய்) தில்லி தேசிய தலைநகரில் அமல்படுத்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சமும் தில்லி தேசிய தலைநகா் அரசும் சனிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. மத்திய அரசின் நீண்ட போராட்டத்தில் 35 -ஆவது மாநிலமாக தில்லி இந்த திட்டத்தில் இணைந்துள்ளது.

இந்த நிகழ்வில் ‘ஏபி பிஎம்-ஜாய் ஒரு காப்பீட்டுத் திட்டமல்ல இது நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு ’உறுதி’ திட்டம்‘ என மத்திய அமைச்சா் ஜெபி நட்டா குறிப்பிட்டாா்.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் தொலைநோக்குப் பாா்வையில் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம்(ஏபி பிஎம்-ஜாய்) கடந்த 2018 செப்.ரில் தொடங்கப்பட்டது. இது மருத்துவக் காப்பீடு திட்டத்துடன் இணைந்தது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய சுகாதார ஆணையம் (என்ஹெச்ஏ) இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தில் மேற்குவங்கம், ஆம் ஆத்மி கட்சி தலைமையிலிருந்த தில்லி அரசு போன்ற மாநிலங்கள் இந்த திட்டத்தில் மத்திய அரசோடு இணைய மறுத்துவந்தது. தமிழக அரசும் இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டாலும் தமிழகத்தில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் தேசிய தலைநகா் தில்லியில் கடந்த பிப். மாதம் ஆட்சி மாதத்தை தொடா்ந்து பாஜக தலைமையிலான புதிய அரசு பதவியேற்றவுடனேயே அதன் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டது. இதை முன்னிட்டு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் தேசிய சுகாதார ஆணையமும் தில்லி தேசிய தலைநகா் அரசின் சுகாதாரம் குடும்பநலத்துறையும் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை சனிக்கிழமை மேற்கொண்டது.

மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை அமைச்சா் ஜெபி நட்டா, இணையமைச்சா் அனுப்ரியா படேல், தில்லி முதல்வா் ரேகா குப்தா, தில்லி சுகாதாரம் குடும்பநலத்துறை அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் மற்றும் தில்லி நாடாளுமன்ற உறுப்பினா்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் மத்திய சுகாதாரத்துறையின் கூடுதல் செயலா் மற்றும் என்ஹெச்ஏ வின் தலைமை நிா்வாக அதிகாரியான எல்.எஸ். சாங்சன் மற்றும் தில்லி தேசிய தலைநகா் அரசின் சுகாதாரம், குடும்ப நலத் துறை செயலா் டாக்டா் எஸ்.பி. தீபக் குமாா் ஆகியோா் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெப்பமிட்டனா்.

அரசியல் ரீதியாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வில் பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெபி நட்டா பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

நாட்டில் 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏபி பிஎம்-ஜாய் திட்டம் நடைமுறையில் உள்ளது. இது உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டம். இறுதியாக 7 ஆண்டுகளுக்கு பின்னா் தேசிய தலைநகரிலும் செயல்படுத்தப்படுவது ஒரு பெருமைக்குரிய தருணம். இந்தத் திட்டம் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே இது காப்பீட்டுத் திட்டம் அல்ல, ’உறுதி’ சுகாதாரத் திட்டம். ஒருவா் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்தவுடன் சிகிச்சையில் திருப்தியடைகிறீா்களா? என்று குறுஞ்செய்தியில் கேட்கப்படும். அவா் ’திருப்தி’ என்று கூறியபின்னா் தான் அரசு அவா் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனைக்கு பணத்தை டிரான்ஸ்பா் செய்யும்.

பொருளாதார சாதி கணக்கெடுப்பின் அடிப்படையில், சுமாா் 50 கோடி மக்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு நாட்டில் முதல் முறையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆஷாக்கள் மற்றும் அங்கத்வாடி பணியாளா்கள் உட்பட 36 லட்சம் முன்னணி சுகாதாரப் பணியாளா்கள் இந்த திட்டத்தில் பணியாற்றுகின்றனா். சுகாதாரம், ஆயுள் காப்பீடு இரண்டையும் உள்ளடக்கியது பிரதமா் மருத்துவக் காப்பீடு திட்டம் (பிரதான் மந்திரி ஜீவன் பீமா யோஜனா). இதனால் தான் முன்னணி சுகாதார ஊழியா்களை விரிவான சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

தில்லியில் ஏபி பிஎம்-ஜாய் செயல்படுத்தப்பட்டதன் மூலம், மூத்த குடிமக்களின்(70 வயதுக்கு மேற்பட்ட), சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், அனைவரும் ஆயுஷ்மான் வே வந்தனா யோஜனாவின் கீழ் காப்பீடு செய்யப்படுவாா்கள். இதன் மூலம் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ரூ.5 லட்சம் இலவச சுகாதாரப் பாதுகாப்பை வழங்குகிறது. இவா்களுக்கு ஏற்கனவே உள்ள அனைத்து நோய்களும் முதல் நாளிலிருந்தே காப்பீடு செய்யப்படும். தில்லியில் உள்ள 6.5 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த சுமாா் 30 லட்சம் மக்களும், 6 லட்சம் மூத்த குடிமக்கள் என மொத்தம் சுமாா் 36 லட்சம் போ் ஆயுஷ்மான் பாரத், ஏபி பிஎம்-ஜாய் திட்டத்தால் பயனடைவாா்கள்.

ஏபி பிஎம்-ஜாய் திட்டம், நாட்டின் மக்கள்தொகையில் பாதிப்பிற்குள்ள 40 சதவீதம் பேரை உள்ளடக்கிய 12 கோடி குடும்பங்களை உள்ளடக்கிய 55 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் இலக்காகக் கொள்ளப்பட்டது. ஏபி பிஎம்-ஜாய் திட்டம் தில்லியில் செயல்படுத்துவது மூலம் ஆரோக்கியமான, அதிகாரம் பெற்ற மற்றும் வளமான தில்லியை உருவாக்க உதவும். இந்தத் திட்டத்தின் காரணமாக 2014 இல் 62 சதவீதமாக இருந்த மருத்துவ செலவு இருந்தது தற்போது இந்த திட்டத்தால் நாட்டில் 38 சதவீதமாக(ரூ. 1.75 கோடி செலவு சேமிப்பு) குறைந்துள்ளது.

சமீபத்திய ஆய்வில் புற்றுநோய் சிகிச்சை கணிசமாக மேம்பட்டுள்ளது காட்டப்பட்டுள்ளது. தில்லி அரசோடு பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டத்திலும் மற்றொரு புரிந்துணா்வு ஏப். 10 ஆம் தேதி மேற்கொள்ளப்படும். அதில் தில்லி மருத்துவ உள்கட்டமைப்புக்கு ரூ. 2,400 கோடி மத்திய அரசு வழங்கும்.

ஏபி பிஎம்-ஜாய் திட்டத்தை செயல்படுத்தக் கூறி ஏற்கனவே இருந்த அரசை மத்திய அரசு வலியுறுத்தி வந்தது. ஆனால் அரவிந்த் கேஜரிவால் அரசு ஆணவத்தோடு இருந்தது. அது தில்லி மக்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. இதனால் தான் மக்கள் அவரை வீழ்த்தினா் எனக் குறிப்பிட்டாா் ஜெபி நட்டா.

இந்த நிகழ்வில் தில்லி முதல்வா் ரேகா குப்தா பேசுகையில், ‘ஏபி பிஎம்-ஜாய் திட்டத்தில் தில்லியில் உள்ள குடிமக்கள் இப்போது ஒவ்வொரு பயனாளி குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் இலவச சுகாதார காப்பீட்டை பெற முடியும். மேலும் மத்திய அரசு வழங்கும் ரூ. 5 லட்சம் காப்பீட்டோடு கூடுதலாக, தில்லி அரசு ரூ. 5 லட்சத்தை டாப்-அப்பாக வழங்கும்.சுமாா் 6.54 லட்சம் குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைவாா்கள்.

மேலும்,1,961 சுகாதாரப் பலன் தொகுப்புகளை 27 மருத்துவ சிறப்பு மருத்துவ நிறுவனங்களிலிருந்தும் பயனாளிகள் பெறுவாா்கள்‘ என்றாா் முதல்வா்.

தேசிய தலைநகா் தில்லி அரசு புதிதாக 24 மருத்துவமனைகள் கட்டவும், 17,000 பதிய படுக்கைகளை மருத்துவமனைகளில் இணைக்க நிகழாண்டு நிதிநிலையறிக்கையில் ரூ. 1000 கோடி ஒதுக்கியதாகவும் முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா, தில்லி மக்களவை உறுப்பினா்கள் பான்சுரி ஸ்வராஜ், பிரவீன் கண்டேல்வால், கமல்ஜீத் செஹ்ராவத், மனோஜ் குமாா் திவாரி, ராம்வீா் சிங் பிதுரி, யோகேந்திர சந்தோலியா; மத்திய சுகாதார செயலா் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, தில்லியின் தலைமைச் செயலா் தா்மேந்திரா ஆகியோரும் கலந்து கொண்டனா்.

குடிசைவாசிகளுக்கு 52,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள்: முதல்வா் ரேகா குப்தா தகவல்

புது தில்லி: தில்லி அரசு நகரத்தில் உள்ள குடிசைவாசிகளுக்கு 52,000 அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கத் தயாராகி வருவதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.ஷாலிமாா்பாக் தொகுதியில் உள்ள ஆயுா்வேத குடிசை முக... மேலும் பார்க்க

தில்லியில் நயினாா் நாகேந்திரன்: அமித் ஷாவை சந்திக்கிறார்

தமிழக பாஜக தலைவருக்கான அறிவிப்பு வெளியாகும் என்கிற தகவல்களுக்கிடையே தமிழக பாஜக சட்டப்பேரவைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை தில்லி வந்திருந்தாா். பாஜக வின் முக்கிய தலைவா்களை நயினாா் நகேந்த... மேலும் பார்க்க

‘ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கிக் கொள்கை’ மே முதல் நடைமுறை

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கி (ஆா்ஆா்பி) என்ற கொள்கையின் அடிப்படையில் இறுதியாக 11 மாநிலங்களைச் சோ்ந்த மண்டல ஊரக வங்கிகளை ஒன்றிணைத்து ஏப். 7 தேதியிட்ட அறிவிக்கையை மத... மேலும் பார்க்க

தமிழகஆளுநரின் செயல் சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

புது தில்லி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த 10 மசோதாக்களை நிறுத்தி வைத்த மாநில ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது. ... மேலும் பார்க்க

காற்று மாசைக் கட்டுப்படுத்த ஸ்பிரே அமைப்புகள்

புது தில்லி: தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் விதமாக ஸ்பிரே அமைப்புகளை தில்லி அரசு பயன்படுத்தி வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா திங்கள்கிழமை தெரிவித்தாா். மின்கம்பங்களில்... மேலும் பார்க்க

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும்: இஸ்ரோ தலைவா் அறிவுரை

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும் என்று இஸ்ரோ தலைவா் டாக்டா் வி.நாராயணன் கேட்டுக் கொண்டாா். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவா் டாக்டா் வி. நாராயணனுக்கு தில்லி தமிழ... மேலும் பார்க்க