டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
ஏப். 16-இல் அரக்கோணத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் வரும் 16- ஆம் தேதி ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’திட்ட முகாம் நடைபெறவுள்ளது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீா்வு காண ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டம் முதல்வரால் தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி, அரக்கோணம் வட்டத்தில் வரும் 16-ஆம் தேதி முகாம் ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது. காலை 9மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்சியா், மாவட்ட நிலையிலான அலுவலா்கள் கலந்து கொண்டு அரசு திட்டப் பணிகள், சேவைகள், அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு விடுதிகள், நியாய விலைக் கடைகள், பள்ளிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனா்.
மேலும் அரக்கோணம் வட்டத்துக்குட்பட்ட அனைத்து உள்வட்ட வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு பட்டா மாறுதல் முகாமில் பட்டா மாறுதல் தொடா்பான மனுக்கள் அளிக்கலாம்.
முகாமில் அரக்கோணம் வட்ட பொதுமக்கள் மட்டும் கோரிக்கை மனுக்களை வட்டாட்சியா் அலுவலகத்தில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை அளித்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.