செய்திகள் :

`ஏமாற்றிவிட்டார்' - புகாரளித்த நடிகை; `அந்தத் தப்ப செய்யாதீங்க' கலங்கும்`காதல்' சுகுமார்

post image
காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறிப் பழகிவிட்டு, தற்போது திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் என நடிகர் 'காதல்' சுகுமார் மீது போலீசில் புகார் தந்திருக்கிற துணை நடிகை ஒருவர், தன்னிடமிருந்து சுகுமார் ஏமாற்றிப் பறித்த நகை, பணத்தை மீட்டுத்தரவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாக போலீசார் சுகுமாரை விசாரித்திருக்கிற நிலையில், சுகுமார் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் 'வெற்றி வேலப்பர்' படக்குழுவின் யூ டியூப் சேனலிடம் இது தொடர்பாகப் பேசியிருக்கிறார் சுகுமார்.அந்த நேர்காணலில்,

''சமீப சில தினங்களா என்னைப் பத்தி வெளிவந்த செய்தியால் என் குடும்பத்தினர் ரொம்பவே காயப்பட்டுப் போயிருக்காங்க. சமூக வலைதளங்கள்லயும் சில யூ டியூப் சேனல்கள்லயும் என்னை ரொம்பவே மோசமானவனா சித்தரிச்சு செய்திகளை வெளியிட்டிருக்காங்க.

ஒரே துறையில் இருக்கிறவங்க பழகறது சேர்ந்து சமூக ஊடகங்கள்ல வீடியோ போடுறதெல்லாம் எல்லா இடத்துலயும் நடக்கறதுதான். ஆனா எங்க பிரச்னைன்னா, நான் என் குடும்பத்தை விட்டுட்டு அவங்க கூடவே வந்து தங்கிடணும்னு சொன்ன போதுதான்.

பரஸ்பரம் ரெண்டு பேருமே ஏற்கெனவே கல்யாணம் ஆனவங்க. அவங்களுக்கு காலேஜ் போற பொண்ணு இருக்காங்க. எனக்கும் குழந்தைகள் இருக்காங்க. அதனாலதான் இந்த விவகாரம் தொடர்பா எதையும் வெளிப்படையாப் பேச நான் தயங்கினேன். ஆனா, அவங்கஇஷ்டத்துக்குப் பேசிட்டாங்க.

சுகுமார்

இப்ப நான் பக்திப் படம் ஒண்ணுல நடிச்சிட்டிருக்கிற நேரத்துல இப்படியான செய்தி என்னை நம்பிப் பணம் போட்ட தயாரிப்பாளர் உட்பட என்னுடைய ரசிகர்கள் எல்லார்கிட்டயுமோ ரொம்பவே கவலையை உண்டாக்கியிருக்கு.

ஒரேயொரு விஷயத்தை மட்டும் நான் இப்ப சொல்ல விரும்பறேன். இந்த விஷயத்துக்காக மனப்பூர்வமா நான் மன்னிப்பு கேட்கிறேன்.. இது எனக்கு நல்லதொரு பாடம். எனக்கு நிகழ்ந்த இந்த மாதிரி பிரச்னைகள் உங்க யாருக்கும் நிகழ்ந்துடாதபடி பார்த்துக்கோங்க. தயவு செய்து உங்களுடைய அந்தரங்க விஷயங்களைப் படமெடுக்க அனுமதிக்காதீங்க.

இப்படித்தான் வாழணும்னு நினைக்காம எப்படியும் வாழலாம்னு நினைச்ச எனக்கு சரியான அடி விழுந்திருக்கு. இந்த துயர நாட்கள்ல இருந்து சீக்கிரம் மீண்டு வரணும்னு கடவுளை வேண்டிக்கறேன்'' எனக் கண்ணீர்  மல்கப் பேசியிருக்கிறார். 

Kudumbasthan:``பணம் இல்லாத உளவியல் நெருக்கடியை சந்திச்சிருக்கோம்; அதுதான் குடும்பஸ்தன்'' - பிரசன்னா

`குடும்பஸ்தன்' திரைப்படத்திற்கு மக்களின் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது.இப்படத்தில் வேலை, பணமில்லாமல் திண்டாடும் நவீன் கதாபாத்திரத்தோடு பலரும் தங்களைப் பொறுத்திப்பார்க்க முடிவதாகச் சொல்கிறார்கள். அப்படி... மேலும் பார்க்க

Parasakthi: "நான் எழுதி விக்ரம் நடிக்க... இந்தி எதிர்ப்புக் கதை..." - சி.காவை வாழ்த்திய வசந்தபாலன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தின் அறிவிப்பு நேற்று வெளியாகியிருக்கிறது. அதர்வா, ஶ்ரீலீலா, ரவி மோகன் என பல நட்சத்திரங்கள் இணையும் இந்த படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ... மேலும் பார்க்க

Kudumbasthan: ``லைம் லைட்டை வேஸ்ட் பண்ணிட்டன்னு பேசுனாங்க; ஆனா...'' - இசையமைப்பாளர் வைசாக் பேட்டி

இணையவெளியில் சுயாதீன இசைகலைஞர்கள் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்அப்படி நாம் நண்பர்களிடையே யதார்த்தமாக பேசிக் கொள்ளும் விஷயங்களைப் பாடல் வரிகளாக விரித்து மெட்டு போட்டு புதிய வடிவிலான வைப் ஒன்றைக் க... மேலும் பார்க்க

Mysskin : `மிஷ்கின் பேசியதில் தவறில்லை; கெட்டவார்த்தை பேசுறவன் கெட்டவனா?' - சமுத்திரக்கனி

'பாட்டல் ராதா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின், வன்மையான வார்த்தைகளைப் பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.இளையராஜாவின் இசையை வர்ணித்துப் பேசுகையில் இளையராஜாவை 'அவன், இவன்' என மிஷ... மேலும் பார்க்க

Parasakthi: "சமூகநீதியை பேசிய சரித்திர படம் 'பராசக்தி'; அதை சிவகார்த்திகேயன்..."- AVM வாழ்த்து

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் ஓ.டி.டி-யில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இவர் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா மூவரையும் வைத்து தனது அ... மேலும் பார்க்க

Vijay Sethupathi : ``பான் கார்டு வலைதளப்பக்கத்தில் தமிழ் சேர்க்க வேண்டும்" - விஜய் சேதுபதி கோரிக்கை

பான் கார்டு விண்ணப்பிக்கும் வலைதளப்பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டும் இருப்பது நிறைய பேருக்கு கடினமாக இருப்பதாகவும், தமிழும் அதில் சேர்க்க வேண்டும் என்றும் நடிகர் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்... மேலும் பார்க்க