முதல் டி20: 13 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிப்பிடித்த இந்திய அணி!
ஏமாற்றி வென்றாரா ஜோகோவிச்? மீண்டும் வலுக்கும் சர்ச்சைகள்!
ஆஸி. ஓபன் காலிறுதிப் போட்டியில் ஜோகோவிச் ஏமாற்றியதாக புகார் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், முன்னணி போட்டியாளரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸை காலிறுதிச்சுற்றில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தினாா்.
உலகின் 7-ஆம் நிலையில் இருக்கும் ஜோகோவிச், முதல் செட்டை 4-6 என இழந்தபோதும், அடுத்த 3 செட்களை 6-4, 6-3, 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்று, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 50-ஆவது முறையாக அரையிறுதிக்கு வந்துள்ளாா்.
அமெரிக்க டென்னிஸ் ஜாம்பவான் ஜான் மெக்கென்ரோ நோவக் ஜோகோவிச்சின் காயம் உண்மையானதாக தெரியவில்லை எனக் கூறியுள்ளார். மேலும் இது முதல்முறையல்ல இதுமாதிரி பலமுறை ஜோகோவிச் செய்துள்ளதாகவும் அல்கராஸ் ஏமாறக் கூடாது எனக் கூறினார்.
இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீரர் புரவ் ராஜாவும் இதே கருத்தினை முன்வைத்துள்ளார்.
ஆனால், அவர் சொன்னதுபோலவே அடுத்தடுத்த செட்களில் ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்தி இறுதியில் 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
அல்கராஸ் ரசிகர்களும் இதைக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஜோகோவிச்சை மோசடியாளர் என வசைபாட தொடங்கினர்.
ஜோகோவிச் - அல்கராஸ் மோதியது இது 8-ஆவது முறையாக இருக்க, ஜோகோவிச் தனது 5-ஆவது வெற்றியைப் பதிவு செய்து ஆதிக்கம் செலுத்துகிறாா்.
25-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று புதிய சாதனை படைக்கும் முனைப்புடன் இருக்கும் ஜோகோவிச், அரையிறுதியில் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவை சந்திக்கிறாா்.