செய்திகள் :

`ஏறுமுகத்தில் முடிந்த நேற்றைய பங்குச்சந்தை' - இன்று எப்படி இருக்கும்; கவனிக்க வேண்டிய பங்குகள்!

post image

இன்று பங்குச்சந்தை எப்படி இருக்கும் என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.

"இந்த மாதத்தின் கடைசி வர்த்தக நாள் இன்று. நேற்று முதல் பாதியில் சந்தை இறங்குமுகத்தில் சென்றாலும், அடுத்த பாதிக்கு மேல் ஏறுமுகத்தில் நகர்ந்தது.

சமீப காலத்தில் இல்லாத அளவுக்கு நேற்று பலமான பங்குகள் வாங்குதல் இருந்தது. ரூ.11,111 கோடிக்கு பங்குகள் வாங்கப்பட்டிருக்கிறது.

இருந்தும், நேற்று நிப்டி சந்தை 23,700-ஐ தொடவில்லை என்பது கவலையளிக்கக் கூடிய விஷயமே. அதனால், பங்குகள் விற்பனையும் இனி இருக்கலாம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள முடியும்.

இன்றைய பங்குச்சந்தை வழிகாட்டுதல்!
இன்றைய பங்குச்சந்தை வழிகாட்டுதல்!

இன்றும், அதிக அளவில் பங்குகள் வாங்கப்பட்டால், 23,700-ஐ தாண்டி சந்தை முடியும். மேலும், 24,000 புள்ளிகளை தொடவும் வாய்ப்புகள் உள்ளது.

ஒருவேளை, 23,400 அளவிலேயே வணிகம் நடந்தால், சந்தை மேலும் இறங்கலாம்.

இன்று கவனிக்க வேண்டிய பங்குகள்!

நேற்றைய தினத்தின் ஹை டெலிவரி பங்குகள் BPCL, Brittania, Hindustan Unilever, Zomato, Tata Chemical, ICICI Health Insurance போன்றவை ஆகும்.

நேற்றைய லாங் பில்டப் பங்குகள் NBCC, Zomato, Hindustan Unilever ஆகும்.

நேற்றைய ஷார்ட் பில்ட்ப் பங்குகள் டாக்டர் ரெட்டிஸ், சி.ஜி பவர், இந்தியன் ஹோட்டல்ஸ் போன்றவை ஆகும்.

ஹை டெலிவரி பங்குகள், லாங் பில்டப் பங்குகள் இரண்டிலும் Zomato மற்றும் Hindustan Unilever இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்".

இன்றைய பங்குச்சந்தை எப்படி இருக்கும் என்பதை இன்னும் விவரமாக இந்த வீடியோவில் விளக்கி உள்ளார் ரெஜி தாமஸ்.

இன்றைய பங்குச்சந்தை: ட்ரம்பின் `பரஸ்பர வரி' அறிவிப்பு; இந்திய பங்குச்சந்தை எப்படி இருக்கும்?

சனி, ஞாயிறு, ரம்ஜான் விடுமுறை முடிந்து மூன்று நாள்களுக்கு பிறகு, இன்று பங்குச்சந்தை தொடங்க உள்ளது. இந்தியாவிற்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் கூறிய 'ஏப்ரல் 2-ம் தேதி' நாளை. இந்த நிலையில், '... மேலும் பார்க்க