செய்திகள் :

ஏலகிரியில் பொங்கல் கொண்டாடிய மலைவாழ் மக்கள்!

post image

ஏலகிரி மலையில் மலைவாழ் மக்கள் தங்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் திருவிழாவை கொண்டாடினர்.

தமிழர் திருநாள் பொங்கல் விழா மூன்று நாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உள்பட்ட ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் 22 கிராமங்கள் உள்ளது. அதில் நிலாவூர் கிராமப் பகுதி மலைவாழ் மக்கள் பாரம்பரியமாக கதவு நாச்சியம்மன் காவல் தெய்வம் கோயில் உள்ளது.

இந்த கோயில் அருகாமையில் அனைத்து கிராம மக்களும் ஒன்றிணைந்து ஐநூறுக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பொங்கல் திருவிழா மூன்று நாள்கள் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. முதல் நாள் போகி பண்டிகை, ஜீவஜந்துக்களுக்கு மற்றும் மாட்டுப் பொங்கல் பால் மற்றும் உளவு தொழிலுக்குப் பயன்படுத்தி வரும் மாடுகளுக்கு வருடம் ஒருமுறை மாடுகள், கன்றுகளுக்கு வர்ணம் தீட்டி புதிய கயிறு கட்டி உற்சாகப்படுத்தப்படுகிறது.

புதிய பானையில் புத்தரிசி பால் நெய் வெல்லும் போட்டுப் பொங்கலிட்டு படையல் போட்டு மாடுகளுக்கு உணவளித்து உற்சாகப்படுத்தி அனைத்து மாடுகளும் பட்டியலில் அடைத்து மிகவும் சிறப்பாகப் பாரம்பரியமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காணும் பொங்கல் முன்னிட்டு அந்த கிராமத்தில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட காளை மாடு மற்றும் பசு மாடுகளுக்கு மஞ்சள் பூசி வர்ணம் தீட்டி அலங்கரித்து ஒரே இடத்தில் பட்டியில் அடைத்து, பின்னர் காவல் தெய்வமாக விளங்கக்கூடிய கதவு நாசியம்மனுக்கு பொங்கல் படையில் வைத்து மேள தாளங்களுடன் பூஜை செய்து மாடுகளுக்கு உணவளித்து மகிழ்ந்து வருகின்றனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டும், பாரம்பரிய நடனமாடியும் ஆடி பாடி பொங்கலைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சுயமாக பிரசவம் பார்த்த பெண்ணும் பிறந்த குழந்தையும் பலி!

ராணிப்பேட்டையில் சுயமாக பிரசவம் பார்த்த பெண்ணும், பிறந்த குழந்தையும் பிரசவத்தின்பின்னர் உயிரிழந்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் ஜோதி எனும் இளம்பெண், தனது நான்காவது பிரசவத்துக்காக தாய் வீட... மேலும் பார்க்க

காற்றின் தரத்தில் நெல்லை முதலிடம்!

இந்திய நகரங்களில் காற்று மாசு பாதித்த நகரங்களையும், தூய காற்று கிடைக்கும் நகரங்கள் குறித்த பட்டியலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்திய நகரங்களில் காற்றின் தரக்குறியீடு (AQI) பல்... மேலும் பார்க்க

கரூர் ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்!

கரூர் ஆர்.டி.மலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ராச்சாண்டார் திருமலையில் இன்று ஜல்லிக்கட்டு தொடங்கியது. மின்சாரம், மதுவிலக்... மேலும் பார்க்க

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளையை அடக்க வந்த அயர்லாந்து நாட்டுக்காரர்!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு காளை அடக்க வந்த அயர்லாந்து நாட்டுக்காரரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு மதுரை ... மேலும் பார்க்க

பொள்ளாச்சியில் பறக்கவிடப்பட்ட ராட்சச பலூன் பாலக்காட்டில் தரையிறக்கம்

பொள்ளாச்சி சர்வதேச பலூன் விழாவில் சில நாள்களுக்கு முன் பறக்கவிடப்பட்ட ராட்சச பலூன், கேரள மாநிலம் பாலக்காட்டில் தரையிறங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.பாலக்காடு மாவட்டம் பத்தான்சேரி பகுதியில் தரையிறங... மேலும் பார்க்க

சென்னை மெரினா கடற்கரையில் குளிக்கத் தடை!

காணும் பொங்கலை முன்னிட்டு மக்கள் கூட்டம் குவியும் என்பதால் சென்னை மெரினா கடற்கரையில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொங்கல், தொடர் விடுமுறை காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் கூட்டம் குவிந்து வருகி... மேலும் பார்க்க