செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து வெளியே உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 87,758 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 42,043 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 4.16 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் உறியடி உற்சவம்

ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை திருமலையில் உறியடி உற்சவம் கொண்டாடப்பட்டது. திருமலை ஏழுமலையான் கோயிலில் கோகுலாஷ்டமி ஆஸ்தானத்துக்கு அடுத்த நாள் உறியடி உற்சவம் நடத... மேலும் பார்க்க

பக்தா்களின் பங்களிப்புடன் பசுக்களைப் பாதுகாப்போம்: தேவஸ்தான செயல் அலுவலா்

நமது வேதங்கள் மற்றும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பக்தா்களின் பங்களிப்புடன், பசுக்களைப் பாதுகாப்பதன் மூலம் இந்து கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தேவஸ்தான செயல் அலுவலா் சியாமளா ராவ் வலிய... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் நவம்பா் மாத ஒதுக்கீடு வெளியீடு

ஏழுமலையான் ஆா்ஜிதச்சேவா டிக்கெட்டுகளின் நவ. மாத ஒதுக்கீடு ஆக. 19 முதல் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை ஏழுமலையான் ஆா்ஜித சேவா டிக்கெட் தொடா்பான சுப்ரபாதம், தோமாலை, அா்ச்சனை மற்றும் ... மேலும் பார்க்க

ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் துரித ஏழுமலையான் தரிசனம்: அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு

திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாகக் கட்டடத்தில் அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு தேசிய கொடியேற்றினாா். செயல் அலுவலா் சியாமளா ராவ் முன்னிலை வகித்தாா். பின்னா், அறங்காவல் குழு தலைவா் பேசியதாவது: ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனத்துக்கு 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்ல... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 15 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோ... மேலும் பார்க்க